நைஜீரீயா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் 30-க்கும் மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கிருஸ்துவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோ ஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்கு வசிக்கும் மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று […]
Other News
ராணுவ பயிற்சி எதிரொலி: அமெரிக்க தீவு மீது ஏவுகணை வீச வடகொரியா திட்டம்
அமெரிக்கா ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் குயாம் தீவு மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் க்வாசாங்-12 ஏவுகணையை வீசி தாக்க வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. ஜூலையில் 2 முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்துள்ளது. அமெரிக்காவை குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் ஐ.நா. சபை பொருளாதார தடை […]
மட்டக்களப்பில் மணல் அகழ்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
மணல் அகழ்வைக் கண்டித்தும், வனப் பகுதிகளில் மரம் வெட்டுவதை தடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பு – வேப்பவெட்டுவான் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இலுப்பையடிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பிரதேசத்தில் 45 பேருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 9 மணல் வியாபாரிகள் நடத்துகின்றனர். நாங்கள் வறுமையில் வாடும் […]
கடற்படையினர் வெளியேற வேண்டும்: மீனவர்கள்
தமது பூர்வீக பூமியான இரணைதீவை ஆக்கிரமித்து தங்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அங்கிருந்து வெளியேறி அரச காணிகளுக்கு செல்லவேண்டுமென இரணைதீவு மக்கள் குறிப்பிடுகின்றனர். அருகிலுள்ள அரச காணிகளில் கடற்படையினர் குடியிருப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றும், தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி என்ற மீனவர் குறிப்பிட்டுள்ளர். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட செய்தியாளர் […]
முதல்வர் கூறினாலும் இராஜினாமா செய்ய மாட்டேன்: டெனீஸ்வரன்
முதலமைச்சர் என்னிடத்தில் இராஜினாமா செய்யுமாறு கேட்கவில்லை. அவ்வாறு கேட்டாலும் நான் இராஜினாமா செய்யவதற்கு தயார் இல்லை என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், ”2013ஆம் ஆண்டு முதலமைச்சர் என்னிடம் அமைச்சுப் பொறுப்பை எவ்வாறு நேர்மையாகத் தந்தாரோ அதே போன்று […]
அரசாங்கத்தின் செயற்பாடுகள் போதுமானதல்ல: சம்பந்தன்
காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கள் போதுமானதல்லவென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக, பிரித்தானிய அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, எதிர்க்கட்சித் தலைவரை இன்று (புதன்கிழமை) சந்தித்தது. இதன்போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, காணிகளை விடுவித்தல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளும் மந்த கதியிலேயே செல்கின்றதென எதிர்க்கட்சித் தலைவர் […]
யுத்த நிறைவே சம்பந்தனை சந்திக்க வைத்தது – மஹிந்த ராஜபக்ஷ
யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காரணத்தினாலேயே தானும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில், மஹிந்தவும் சம்பந்தனும் ஒரே மேடையில் சங்கமித்திருந்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய போதே மஹிந்த மேற்குறித்தவாறு கூறியுள்ளார். அத்தோடு, யுத்தம் நிறைவடைந்தமையே நல்லிணக்கத்திற்கும் அடித்தளமிட்டதென குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அனைவருக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த தனக்கு, சுதந்திரம் பறிபோய்விட்டதெனவும் மஹிந்த […]
இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது! – நாடாளுமன்றில் மீண்டும் தெரிவித்தது கூட்டமைப்பு
வடக்கில் கைது, தேடுதல்களால் முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், இராணுவமே ஆவா குழுவை உருவாக்கியது எனவும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவக சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு […]
ஆவா குழுவின் நடவடிக்கை புலிகளின் மீள் எழுச்சியா? – அரசின் பதிலைக் கோருகின்றது மஹிந்த அணி
“ஆவா குழு உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டதை மேற்கோள்காட்டி விடுதலைப்புலிகள் அமைப்பு மீள இயங்க ஆரம்பித்துள்ளதா? இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?” என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மஹிந்த ஆதரவு அணி எம்.பியான பத்ம உதயசாந்த, சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போது, கிழக்கு மாகாணத்தில் ஐந்து பொலிஸ் நிலையங்களை இலக்குவைத்து […]
அரசியல் கைதிகளின் படுகொலைக்கு நீதி கோரியும் விடுதலையை வலியுறுத்தியும் வடக்கில் போராட்டங்கள்!
சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட அரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஷன் ஆகியோரது 5ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நேற்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் கைதிகள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அதற்குக் காரணமானவர்களை நீதித்துறைமுன் நிறுத்தி கடும் தண்டனை வழங்கவும், படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கவும், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுவிக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்கக் கோரியும் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன





