Other News

ஈழத்தின் முதல் பெண் விமானி நாடாளுமன்றிற்கு வருகை!

  ஈழத்தின் முதல் தமிழ் பெண் விமானியான அர்ச்சனா செல்லத்துரை, இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றிற்கு வருகை தந்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. இதன் போது நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த அர்ச்சனா செல்லத்துரை, சபை நடவடிக்கைககளை பார்வையிட்டார். இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் […]

புதிய வெளிவிவகார அமைச்சர் யார்? ஐ.தே.க., சு.க இடையே வாக்குவாதம்

புதிய வெளிவிவகார அமைச்சர் குறித்து அரசுக்கு கடும் வாக்குவாதம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சராக இருந்து ரவி கருணாநாயக்க நேற்று தனது பதவியை இராஜனாமா செய்ததையடுத்து குறித்த அமைச்சு பதவியை வெற்றிடமாகியுள்ளது. யாருக்கு அந்த பதவியை வழங்குவது என்று பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றும் அரசால் இறுதி முடிவொன்றை எடுக்க முடியாதுள்ளது. திலக் மாரப்பன தற்காலி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாளும் தற்போது அந்த நிலைப்பாடு கைவிடப்படுள்ளது. முன்னதாக அமைச்சர்களான […]

முதல்வருக்கு அமோக வரவேற்பு: தினகரன் அணி அதிர்ச்சி

விழுப்புரம் சென்ற, முதல்வர் பழனிசாமிக்கு, வழிநெடுகிலும், கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தது, தினகரன் அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சொந்த தம்பியை சுட்டுக்கொன்ற 10 வயது சிறுவன்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மேற்கு மிப்ளின் நகரில் வசிக்கும் பெண்மணி தனது பாதுகாப்புக்காக உரிய அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்திருக்கிறார். நேற்று காலை அந்த பெண்ணின் இரு மகன்களும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது, 10 வயதான மூத்த மகன் தாய் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது 6 வயது தம்பியின் தலையில் சுட்டுள்ளான். இதனையடுத்து, தனது தாய்க்கு போன் செய்து தம்பியை சுட்ட விவகாரத்தை கூறியுள்ளான். ரத்த வெள்ளத்தில் […]

வித்தியா கொலை வழக்கு: விஜயகலாவிடம் விசாரணை

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (புதன்கிழமை) மாலை பல மணிநேரங்கள் விஜயகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கை, எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த வழக்கு விசாரணையின் போது, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். மாணவி வித்தியா கொலையுண்ட […]

தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறும் தமிழக மீனவர்களையும் தடுத்து வைக்கப்படும் படகுகளையும் விடுவிக்குமாறு தமிழ் நாட்டில் எவ்வித போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அரசாங்கம் தனது கொள்கையிலிருந்து மாறுபடாதென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாண்டு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதால், கடல் வளம் பாதிக்கப்படுவதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்தோடு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட […]

அரசியல் சாசனத்தில் அடிப்படை கோரிக்கைகள் நிராகரிப்பு: சுரேஸ்

உத்தேச அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் பல நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி கோரிக்கை என்பன நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் குரல்கொடுத்து வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார். யாழில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில், வடக்கு […]

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. தெல்லிப்பழையைச் சேர்ந்த சந்திரநாதன் ரஜிதரன் என்பவரே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவருடன் சேர்த்து, கொக்குவில் வாள்வெட்டுடன் தொடர்புபட்டிருந்த 11 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையினர் […]

மத்தல விமான நிலையம் 40 ஆண்டுகள் இந்தியா வசமாகிறது

மத்தல அனைத்துலக விமான நிலையத்தை இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்திய நிறுவனம் ஒன்றுக்கு மத்தல விமான நிலையத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். சீனாவின் நிதியுதவியில் கட்டப்பட்ட மத்தல விமான நிலையத்தை, இந்திய நிறுவனத்தின் உதவியுடன் […]

சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்தார் ரவி

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது பதவியை இராஜனாமா செய்வதாக நாடாளுன்றில் அறிவித்தார். நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நோக்கம் நாட்டில் இஞ்ச ஊழலை ஒழிப்பதற்காகும். மீண்டும் பழைய யுகத்தை நோக்கி செல்ல முடியாது. 32 வருடங்கள் நான் உழைத்த ஐக்கிய தேசியக் கட்சியக்கும், நல்லாட்சி அரசுக்கு பங்கம் ஏற்படாமல் இருக்கவே எனது பதவியை இராஜனாமா செய்கிறேன். மாறாக எவருக்கும் பயந்து அல்ல என்று தெரிவித்தே இராஜனாமா செய்வதாக அறிவித்தார். […]