ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் தளபதிகள் உயிரிழந்தனர். இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் சமீப காலமாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்த அபு சயீத், கடந்த மாதம் குணார் மாகாணத்தில் நடந்த வான்தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அந்த இயக்கத்தின் […]
Other News
பாகிஸ்தான் சுதந்திர தின விழா: எல்லைப்பகுதியில் மிகப்பெரிய கொடியை ஏற்றி கோலாகல கொண்டாட்டம்
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர விழாவை அந்நாட்டு மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தெற்காசியாவில் மிகப்பெரிய தேசியக் கொடியை இன்று லாகூர்-அட்டாரி எல்லைப் பகுதியில் ஏற்றப்பட்டது. வெள்ளையரின் ஆட்சியின்கீழ் ஒன்றுபட்ட பாரத தேசமாக அடிமைப்பட்டு கிடந்த நமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தீர்மானித்தபோது, இங்குள்ள இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படாது. எனவே, முஸ்லிம்களுக்கு என ஒரு தனிநாடு பிரித்து தரப்பட வேண்டும் என […]
என்னிடமும் ஆதாரம் உண்டு! – அஜித் நிவாட் கப்ரால்
பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, தன்னிடமுள்ள ஆதாரங்களையும் சமர்ப்பிக்க விரும்புவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புண்டு என, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனையடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், மேற்குறித்தவாறு […]
செஞ்சோலை தளிர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஆண்டுகள் பதினொன்று!
யுத்தத்தால் தமது உறவுகளை பறிகொடுத்து, பாசத்திற்காய் ஏங்கித் தவித்து, எதிர்காலம் பற்றி சிந்திக்கவே தெரியாத பருவத்தில் வாழ்ந்த செஞ்சோலை சிறுமிகளை கொடூரமாக கொன்றொழித்து இன்றுடன் ஆண்டுகள் பதினொன்று ஆகிவிட்டது. இலங்கை படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களில், வரலாற்றில் மிகவும் கறைபடிந்த, அனைவர் மனதையும் உருக்கும் கோரச் சம்பவ பட்டியலில் இதுவும் ஒன்று. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு இதே […]
விஜயதாசவிற்கு வலை வீசும் மஹிந்த அணி!
நீதியமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக ஐ.தே.க.வில் அண்மைய நாட்களாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், அவரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷனின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டதாலேயெ நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச சதித் திட்டத்தின் […]
நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்கள் கைது
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 18 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றையும் மீட்ட கடற்படையினர், மீனவர்களை யாழ். நீரியல் வள […]
நம்பிக்கையை சிதறடிக்கும் சி.வி: சத்தியலிங்கம் குற்றச்சாட்டு
எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியா சேமமடு கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல் நட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய மாகாணத்தில் புதியவர்கள் அரசியலுக்கு வருவதும் ஊரில் இருந்து ஒருவர் அரசியலுக்கு […]
தீர்க்கமான முடிவை நோக்கி ஐ.தே.க!
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அண்மைய காலமாக பல்வேறு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில், இன்னும் மூன்று தினங்களில் கூடவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளதாக கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழு, எதிர்வரும் 17ஆம் திகதி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ளது. அன்றைய தினம் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதால், கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் பிரதமர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். […]
பீரங்கியை சுமந்தவர்களுக்கு கத்தியை சுமக்கவேண்டிய அவசியம் இல்லை: முன்னாள் போராளிகள்
பீரங்கிகளையும் செல்களையும் தோளில் சுமந்து சென்று தாக்குதல் நடத்தி ஜனநாயக பாதைக்கு வந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு, கத்திகளுடன் அலைய வேண்டிய தேவையில்லையென ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் எஸ்.துளசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆவா குழு என்ற பெயரில் முன்னாள் போராளிகளே செயற்படுகின்றனர் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், […]
மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் […]





