Other News

தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையே யுத்தம்

தமிழகத்தில் தியாகத்திற்கும், துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் நடைபெற்று வருவதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 122 எம்.எல்.ஏக்களும் எங்கள் ஆதரவாளர்கள் தான். ஆனால் அதில் ஒரு சிலர் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் சுயநலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வாக்காளர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் […]

துப்பாக்கிச் சுடுதலில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருவதால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தமிழக அணி தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். 9-வது தெற்கு மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை ஆவடியை அடுத்த வீராப்புரம் காவல்துறை பயிற்சி மையத்தில் நடைபெற்றது, இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி […]

எடப்பாடி பழனிசாமி கட்சிப் பதவி பறிப்பு: தினகரன் அதிரடி

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் 19 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்ஸில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் டிடிவி. தினகரன், அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியை பறித்து வருகிறார். அவர்களுக்குப் பதிலாக, வேறு நபர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் […]

டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்ததைக் கண்டித்து, அவரது உருவபொம்மை சேலத்தில் எரிக்கப்பட்டது. சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் இன்று காலை நீக்கினார். அதனை கண்டிக்கும் விதமாக 100-க்கும் அதிகமானோர் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடி தினகரனுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து தினகரன் உருவபொம்மையை தீயிட்டு எரிந்தனர். மேலும் சேலம் மாவட்டம் ‌அயோத்திபட்டினம் உள்ளிட்ட […]

பாதுகாப்புக் காரணங்களுக்காக 1,300 வெளிநாட்டு பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழையத் தடை!

கடந்த வருடம் 1,300க்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளுக்கு இலங்கைக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்ததாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களுள் பெரும்பாலானோர் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரிய நாட்டவர்களாவர். இந்த நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்குள் நுழைவதற்கு இலங்கை அரச புலனாய்வுப் பிரிவினர் அனுமதி வழங்கினால் மாத்திரமே குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அவர்களுக்கு விசா வழங்கும். 2014 ஆம் ஆண்டு முதல் உலகப் பாதுகாப்புக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சில நாடுகளின் […]

கிளிநொச்சியில் வாள்வெட்டு! குடும்பஸ்தர் படுகாயம்!!

கிளிநொச்சியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார் பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை மீது நபரொருவர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது. வாள்வெட்டில் படுகாயமடைந்த காந்தி கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடைய கிருபாகரன் என்பவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். உழவு இயந்திரத்தில் வந்த […]

மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின்னர் மேற்பார்வை அரசு அமைக்கப்படவேண்டும்! – விக்கி யோசனை

20 ஆவது திருத்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டு, அதன் கீழ் மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அதன் பின்னர் மாகாணங்களில் மேற்பார்வை அரசு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ஒன்பது மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கான 20 ஆவது அரசமைப்பு திருத்த வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால், அனைத்து மாகாண […]

ஜனாதிபதி மைத்திரியின் கையில் சட்டமா அதிபர் திணைக்களம்?

சட்டமா அதிபர் திணைக்களத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவுள்ளார் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில்  பரபரப்பாகப் பேசப்படுகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதி அமைச்சின் கீழேயே இதுவரை காலமும் சட்டமா அதிபர் திணைக்களம் இருந்து வருகிறது. விஜயதாஸ ராஜபக்ஷ நீதி அமைச்சராக இருந்தபோது, சட்டமா அதிபர் திணைக்களம் சரியாகச் செயற்படவில்லை என்று அரசில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் […]

ஹார்வே புயலில் சிக்கிய டெக்சாஸ் பேரழிவு மாகாணமாக டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை பேரழிவு மாகாணம் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில் டிரம்ப் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறார். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தை கடந்த சில தினங்களாக ‘ஹார்வே’ புயல் அச்சுறுத்தி வந்தது. இது 4-வது வகை புயலாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு டெக்சாஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. மிகவும் வலிமையான ‘ஹார்வே’ புயல் 12 ஆண்டுகளில் […]

தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைகிறார்

துபாய்க்கு தப்பி ஓடிய தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளார். இத்தகவலை தாய்லாந்தின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். தாய்லாந்து முன்னாள் பெண் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா (50). விவசாயிகளுக்கு அரிசி வழங்கியதில் ஊழல் செய்ததாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே யிங்லக் ஷினாவத்ரா மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாக […]