வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங்-உன் உலக நாடுகள் கடும் எதிர்ப்பை மீறி அணு சோதனை, மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு மிரட்டி வருகிறார். கடந்த செப் 3-ம் தேதி வரை 6 முறை அணு சோதனைகளையும், ஒரே ஆண்டில் 12 ஏவுகணை சோதனைகளையும் நடத்தியுள்ளார். வடகொரியாவை கட்டுப்படுத்தும் வகையில், கடுமையான பல தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை, ஐ.நா., சபையில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில், அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று ஐ.நா. பொதுச்சபையில் […]
Other News
ஜெயலலிதா மரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும்
திண்டுக்கல்: மதுரையில் நடந்த அ.தி.மு.க. பொதுக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் யாரும் அவரை பார்க்கவில்லை என்றும், இட்லி சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று பொய் சொன்னதாகவும் சொல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு டி.டி.வி. தினகரன் குடகில் பதிலளித்து பேசும் போது, அமைச்சர் சீனிவாசன் பதவி […]
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது
இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். போயஸ் கார்டன் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளேன். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.6ல் நடைபெறும் இறுதி விசாரணையில் பங்கேற்க, தமக்கு தேர்தல் ஆணையம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது. அன்று தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இடைக்கால அறிக்கை குறித்து வவுனியாவில் ஆய்வுக் கூட்டம்! – ஒக்டோபர் 8ஆம் திகதி நடக்கும்
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களுக்குச் சாதகமான எத்தகைய விடயங்களை மேலும் சேர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்த மாதம் 8ஆம் திகதி வவுனியாவில் பொதுக் கூட்டத்தை நடத்த ரெலோவின் தலைமைக் குழு தீர்மானித்துள்ளது. வவுனியாவில் ரெலோவின் தலைமைக் குழு நேற்றுக் கூடியது. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை என்பவற்றில் உள்ள சாதக பாதக விடயங்களை நிபுணத்துவம் […]
சிவராம் கொலையாளிகள் மீது நடவடிக்கை உடன் அவசியம்! – ஐ.நா. சென்ற சிவாஜிலிங்கம் வலியுறுத்து
ஊடகவியலாளர் சிவராம் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அங்கு வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ஊடகவியலாளர் சிவராம் இல்லையெனில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. சிவராம் படுகொலையுடன் […]
கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாழடைந்த கட்டடப் பகுதியில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த சடலம் தொடர்பில் அடையாளம் காணும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இடைக்கால அறிக்கையை அடியோடு நிராகரித்தார் வடக்கு முதல்வர் விக்கி!
“புதிய அரசமைப்பு உருவாக்காத்துக்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம். சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகவே குறித்த அறிக்கை உள்ளது. எதனைப் புறக்கணித்து நாம் எழுபது வருடங்களுக்கு மேலாகப் போராடி வந்தோமோ அதனை வலியுறுத்துவதாகவே அறிக்கை அமைந்துள்ளது.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று மாலை கேள்வி – பதில்களுடன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கேள்வி:- உத்தேச அரசமைப்பு […]
இலங்கையில் பியர் உற்பத்தியை அதிகரிக்க உத்தேசம்!
பியர் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டு வருவதாக கிறிஸ்தவ மத அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் வாய்மூல கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கேள்வியைக் கேட்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுற்றுலாத்துறை சிறப்பாக காணப்படுகின்ற வெளிநாடுகளுக்குச் சென்று பார்த்தால் அங்கு சிறிய […]
26ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!
எதிர்வரும் 26ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆகிய தினங்களில் விசேட நாடாளுமன்ற அமர்வுகள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 26ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிமுதல் இரவு 7.30 மணிவரை நாடாளுமன்றம் நடைபெறும். அன்றையதினம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான கட்டளைச் சட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளபோதும் தேர்தல்களை நடத்துவதற்கு […]
பிக்பாசில் இருந்து வெளியே போகிறார் ஹரீஷ்..! சுஜா காப்பாற்றப்பட்டது எப்படி?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வீதம் வெளியேற்றப்பட வேண்டும். அதன்படி இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் சினேகனை தவிர மற்ற 5 பேரும் உள்ளனர். அதாவது சினேகன் கோல்டன் டிக்கெட் வாங்கி விட்டதால் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். எனவே சுஜா, கணேஷ், ஹரீஷ், ஆரவ் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இதில் குறைந்த வாக்குகள் பெற்றவர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் […]





