நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் மாரி-2 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மாரி’. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி மோகன் இயக்குகிறார். இயக்குநர் பாலாஜி மோகன் அவருடைய ட்விட்டர் […]
Other News
குர்தீஸ் மக்களிடம் இருந்து பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டிய ஈழத்தமிழினம்
100 வீதம் விடுதலை சாத்தியமில்லை என்று அரசியல் ஆய்வாளர்களால் கூறப்பட்ட குர்தீஸ் மக்கள் இன்று சுதந்திர விடுதலை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அது அவர்களின் மிகப்பெரிய முயற்சிகளின் வெற்றியாகும். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகால வரலாற்றுப்பாரம்பரியம் கொண்ட குர்தீஸ் இன மக்களின் தேசம் நான்கு துண்டுகளாக ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளால் துண்டாடப்பட்டிருக்கிறது. இதை லாண்ட் லொக் (Land Log )என அழைப்பார்கள். இதுபோல் ஆசியாவில் நேபாளம், ஆப்கானிஸ்தான் என்பவையும்காணப்படுகிறது. […]
மாகாண ஆளுநர்களை சந்திக்கிறார் மைத்திரி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மாகாண சபைகளின் ஆளுநர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது. ஆயுட்காலம் முடிவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மாகாண சபைகளின் ஆட்சியதிகாரத்தை ஆளுநர்களிடம் ஒப்படைப்பதே அரசின் திட்டமாக இருந்தது. எனினும், தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் அரசு இன்னும் உத்தியோகபூர்வமாக இறுதி முடிவெதையும் எடுக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுநர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பில் பிரதமரும் […]
’20’ குறித்து உரிய முடிவு! – அரசு தெரிவிப்பு
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எதிர்காலத்தில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்றுப் பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழ் கட்டளை மீதான விவாதம் ஆரம்பமானது. இதில் உரையாற்றிய தினேஷ் குணவர்தன எம்.பி.,”நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்திலிருந்து 20ஆவது திருத்தச் சட்டமூலம் இன்னமும் அகற்றபடவில்லை. இது […]
ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பு: முறியடிக்க பொது எதிரணி வியூகம்! – தேசிய கூட்டணி அமைக்க மஹிந்த ஒப்புதல்
புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற […]
10 லட்சம் கொடுத்து ஆசை காட்டிய பிக்பாஸ்; ஏற்க மறுத்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கொண்டது. தற்போது இறுதி 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றார். தமிழ் பிக் பாஸ் போட்டியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒவ்வொரு வாரமும் மக்கள் வாக்களித்து பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கொடுக்கலாம். மிகவும் பரபரப்புடன் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் […]
பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் பெட்டியுடன்ஆரவ் வெளியேற்றப்பட்ட நபர் யார்…!!
100 நாட்களை கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, கிராண்ட் ஃபைனலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது, ஆனால், அதற்குரிய எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாமலே கழிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கிறது. நிகழ்ச்சியின் பிரம்மாண்ட மேடையில் 15 பேருடன் போட்டியிட்டு இறுதியாக டைட்டிலை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். கடந்த வாரம் கமல்ஹாசன் அடுத்த வார […]
குர்திஸ்தான் மலர்கிறது!
குர்திஷ் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவாக எழுப்பியிருக்கிறார்கள். பொது வாக்கெடுப்பில் தனிநாடு அமைய வேண்டும் என 92% மக்கள் வாக்களித்துள்ளனர். வடக்கு ஈராக் மாநிலமான குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பில், அம்மாநில வாக்களர்களான 52 லட்சம் பேரில் 78% மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 92% பேர் குர்திஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். குருது மக்களின் நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, […]
வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி
என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன். இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார். வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் […]
வித்தியா கொலை வழக்கு – 7 பேருக்குத் தூக்கு!!
1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்தது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 […]





