Other News

பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ […]

ஆரவ் குடும்பத்தினரை சந்தித்த ஓவியா..

நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி விழாவில் நடிகை ஓவியா உள்ளே நுழைந்தபோது அவருக்கு அரங்கமே அதிரும் அளவுக்கு கைதட்டல் கிடைத்தது. பின்னர் பேசிய ஓவியா ‘என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன்’ என கூறியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனால் […]

ஆரவ் வெற்றிபெற்றவுடன் முதலில் பதிவு செய்த ட்வீட் இது தான்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று முடிவடைந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டில் இறுதிவரை ஆரவ், சினேகன், கணேஷ் மற்றும் ஹரிஷ் தான் இருந்தனர். இந்த நால்வரில் ஆரவ் நேற்று பிக் பாஸ் டைட்டிலை வெற்றி பெற்றார். மேலும் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை கலந்து கொண்ட அணைத்து பிரபலங்களும் வந்தனர். நமீதாவை தவிர அனைவரும் இந்த பிக் பாஸ் இறுதிப் போட்டியில் அணைத்து பிரபலங்களும் பங்கு […]

பௌத்த தேரர்களை அரசியல் தலைவர்களே தீர்வுக்கு வழிப்படுத்த வேண்டும்!

“அரசியல் தீர்வுக்கு தமிழர் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக பௌத்த தேரர்களும் தென்னிலங்கை இனவாதிகளுமே தீர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவர்களை தெற்கு அரசியல் தலைவர்களே வழிப்படுத்த வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் உங்களின் பொறுப்பு.” – இவ்வாறு பஸில் ராஜபக்ஷவிடம் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எடுத்துரைத்தார். இரண்டு நாள் பயணமாக வடக்குக்கு […]

வடக்கு, கிழக்கு வாழ் மலையகத்தவர்களுக்கு தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வேண்டும்!

வடக்கு – கிழக்கில் உள்ள மலையக மக்களுக்கு தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மலையக மக்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில், அந்தக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோரை நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள மலையக மக்கள் […]

காணாமல்போனோர் பணியகத்துக்கு நான்கு தமிழ் ஆணையாளர்கள் கட்டாயம் வேண்டும்

“காணாமல்போனோர் அலுவலகத்துக்கு நியமிக்கப்படும் 7 ஆணையாளர்களில் 4 பேர் தமிழர்களாக இருக்கவேண்டும். எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையேயான சந்திப்பு மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. […]

தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை ஒருபோதும் கூட்டமைப்பு ஆதரிக்காது!

“தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசியல் அமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் என்றைக்கும் […]

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு: தமிழரசுக் கட்சியுடன் ரெலோ நாளை முக்கிய பேச்சு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் இடையில் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்துடன் பேசுவதற்கு ரெலோ அமைப்பு தீர்மானித்திருந்தது. தமிழரசுக் கட்சியிடம் அதற்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது

சு.க. உறுப்பினர்களுடன் தனித்தனியே மைத்திரி இரகசிய சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நீர்க்கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் சுமார் மூன்று மணிநேரத்துக்கும் மேல் இடம்பெற்றுள்ள இந்தச் சந்திப்பில் கட்சி உறுப்பினர்களை தனித்தனியே சந்தித்து ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளமை ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்திவருவதாலும், மேலும் சிலர் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்டுவருவதாலும் கட்சியை முன்நோக்கி அழைத்துச்செல்வதில் […]

மஹிந்தவை வளைக்க மறுபடியும் ‘கதிரை’! – திட்டத்தை தூக்கி வீசினார் மைத்திரி

பொதுஜன ஐக்கிய முன்னணி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது. மேற்படி முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை’ சின்னத்தில் களமிறங்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட திட்டமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்திலேயே […]