இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான […]
Other News
தாய்வான் வங்கி மோசடி: அரசசார்பற்ற நிறுவனமொன்றும் விசாரணைப்பொறிக்குள்!
தாய்வானில் பிரபல வங்கியொன்றில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை இலங்கையிலுள்ள வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ள இணைய மோசடி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. இந்த மோசடியுடன் தொடர்புட்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இதனுடன் அரச சார்பற்ற நிறுவனமொன்றும் தொடர்புபட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த அரச சார்பற்ற நிறுவனம் கொள்ளையிடப்பட்ட பணத்தின் ஒருபகுதியை தனது கணக்கில் வைப்பிலிட்டுக் கொண்டுள்ளதாகவும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் இனிவரும் […]
புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!
அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார். ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் தீவிர பிரசரங்களை முன்னெடுத்துவருவதுடன், நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டிவருகின்றன. இதனால், […]
புதிய அரசமைப்பு குறித்து ஜயம்பதி, சுமந்திரனிடம் 20இல் கேட்டறிவார் பப்லோ!
இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் ஐ.நா. அதிகாரிகளும் ஆர்வம்கொண்டுள்ளனர். அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். புதிய […]
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வடக்கில் ஹர்த்தால்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் நடைபெறவுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந்தக் ஹர்த்தாலுக்கு பல பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடக்கு […]
விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகை
தெலுங்கிற்கு சென்று நடிக்கத் தொடங்கிய ரகுல் பிரீத் சிங் நடித்த பல படங்கள் ஹிட்டாக அமையவே, தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் அவர். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் நடித்து, தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ரகுல்பிரீத்சிங், தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் […]
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம் பற்றி ராகுல்காந்தி உருக்கம்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சடலத்தை கண்டு, தாம் மிகுந்த வேதனையடைந்ததாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினர். அப்போது, அதில் பங்கேற்றவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், பிரபாகரனின் சடலத்தை […]
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம்
போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும். இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, […]
தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி வடக்கில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் இன்று மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9 மணியளவில் யாழ். நகர் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்னால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம் […]
அமெரிக்காவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 6.6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானது. புல்டிர் தீவில் 111.8 கி.மீட்டர் (69 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் […]





