Other News

மன்னார் வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் காட்டு யானைகளின் அட்டகாசம்- பாதீப்பை எதிர்கொள்ளும் கிராம மக்கள்-(VIDEO)

மன்னார்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுவுக்குற்பட்ட   வெள்ளாங்குளம் ‘சேவா’ கிராமத்தினுள் நேற்று வியாழக்கிழமை(30) இரவு காட்டு யானைகள் குறித்த கிராமத்தினுள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தியுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த கிராமத்தினுள் தொடர்ச்சியாக காட்டு யானைகள் உற் புகுந்து விவசாயம் மற்றும் தோட்டச் செய்கையினை சேதப்படுத்தி வந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை(30) இரவு குறித்த கிராமத்தினுள் உற் புகுந்த காட்டு யானைகள் […]

மன்னாரில் காணாமல் போன குடும்பஸ்தர் மடு காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

 மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று(01) வெள்ளிக்கிழமை மாலை மடு   காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.   -சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை […]

2018 இல் மனிதாபிமான உதவிகளுக்கு 22.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை

2018 ஆம் ஆண்டில் மனிதாபிமான உதவிகளுக்கு 22.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன. உலகில் மிகவும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள 91 மில்லியன் மக்களுக்கு உதவ இந்த நிதி அவசியமாகும். குறித்த நிதியானது கடந்த ஆண்டு கோரப்பட்ட நிதியை விட ஒரு வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. […]

வெடிபொருள்களுடன் சுற்றி திரிந்த இந்தியர்கள் உள்பட 6 பேர் கைது

நேபாள பாராளுமன்றத்துக்கு 2-வது கட்ட தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அவர்கள் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேபாள நாட்டின் கானிகோலா என்ற இடத்தில் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்த ஒரு கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் […]

திருமதி செல்லம்மா அப்பாசாமி

ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், புத்தூரை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி செல்லம்மா அப்பாசாமி (29.11.2017) புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர் களான கந்தையா சின்னத் தங்கம் தம்பதியரின் ஏகபுதல்வி யும் காலஞ்சென்ற அப்பா சாமியின் அன்புமனைவியும் காலஞ்சென்ற அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகளும் நாகேஸ்வரன், ஞானேஸ்வரன் (துர்க்கா மோட்டோர்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும் பூரனேஸ்வரி, சற்குணதேவி ஆகியோரின் அன்பு மாமியும் சுதர்சன் – சுகன்யா, வாஹினி – வேல்மகிபன், அர்சிகா – நிமல் […]

சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் பலி : 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 52 பேர் காயமடைந்துள்ளதாக அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் தற்போதுவரை 14 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 752 குடும்பங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, பாதுகாப்பான […]

இன்றைய ராசிபலன் 02.12.2017

மேஷம்: இன்றும் மாலை 4.40 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பரணி நட்சத்திரக்காரர் களுக்கு வீண் டென்ஷன் வந்து போகும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களைக் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம்: அநாவசியச் செலவு களை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து […]

பிரதேச செயலகங்கள் அனைத்தும் நாளை திறக்கப்படும்

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களும் நாளைய தினம் திறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 10,000 ருபா வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்ததுடன், அதற்குத் தேவையான நிதி அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போதே துறைமுகங்கள் மற்றும் கப்பற் […]

மைத்திரிபால சிறிசேன

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் – ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தொழில் திணைக்களத்தின் 191 புதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார். ”இயற்கை அனர்த்தத்தினால் சிலர் உயிரிழந்துள்ளனர். பலர் சொத்துக்களையும் இழந்துள்ளனர். அவர்களின் துன்பத்துடன் நாம் ஒன்றிணைய வேண்டும். அவர்களுக்கான நலன்புரி விடயங்களில் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். தேசிய அனர்த்தம் ஏற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்படையினர், […]

ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி நாளை

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி, அடிலெய்ட்டில், இலங்கை நேரப்படி காலை ஒன்பது மணிக்கு பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பிக்கின்றது. அந்தவகையில், பழமை வாய்ந்த ஆஷஸ் தொடரின் முதலாவது பகலிரவுப் போட்டியாக இப்போட்டி அமைகின்றது. முதலாவது போட்டியின் முதல் மூன்று நாட்களிலும் இரண்டு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தியபோதும் நான்காவது நாளை முழுமையாக ஆதிக்கம் செலுத்தி அவுஸ்திரேலியா, 10 […]