கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள ஓகி புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ஓகி புயலின் தாக்கம் கேரளாவையும் ஆட்டிப்படைத்துள்ளது. ஓகி புயல் திருவனந்தபுரம் அருகே 60 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதால், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொச்சி ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மரங்கள், மின்சார கம்பங்கள் சாய்ந்ததால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கி […]
Other News
“நபி அவர்கள் காட்டித்தந்த வாழ்க்கை வழிமுறை முக்கியமானதாகும்”
நபி அவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபி அவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது; இஸ்லாமிய சமய நம்பிக்கையின் படி இறைவனால் முஹம்மத் நபி அவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபியாகக் தெரிவுசெய்யப்பட்டதுடன், […]
பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது
இலங்கையில் பல்வேறு சமூக, கலாசாரங்களைக்கொண்ட மக்கள் வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றுகின்ற போதிலும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இது சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதுடன், பன்மைத்துவ சூழலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது, பண்டைய காலம் முதலே எமது இந்த அழகிய தேசம் பல்வேறு சமய, கலாசார […]
வீட்டிலிருந்த பெண் சுட்டுக்கொலை
கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வீட்டிலிருந்த பெண்ணொருவர் சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு, கொட்டாவை, பாலிகா வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் வீட்டிற்குள் சம்பவதினமான நேற்று இரவு உள்நுழைந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய பெண்ணொருவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், […]
பொதுமக்களுக்கான யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வேண்டுகோள்
தற்போதைய பருவமழைக் காலத்தைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். குறிப்பாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. மருத்துவ விடுதிகளில் அளவுக்கதிகமான நோயாளிகள் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர். மிகுந்த நெருக்கடியான நிலையில் வைத்திய சேவையை வழங்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்கள் நோயாளிகளைப் பார்வையிட வருவதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். ஒரு நோயாளியைப் பார்வையிடுவதற்கு இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மகப்பேற்று விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட ஒருவருடன் ஒருவர் […]
அம்ருதா ஜெ.வின் மகள்தான் – ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு பேட்டி
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என ஜெ.வின் நீண்ட நாள் தோழி கீதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். இந்நிலையில் இதுபற்றி சென்னையில் வசிக்கும் […]
புதிய அகதி அந்தஸ்து எவருக்கும் வழங்கப்படவில்லை – பிரித்தானியா
புதிதாக எந்த ஒரு இலங்கை ஏதிலியின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் 3 ஆயிரத்து 535 ஏதிலிகள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 838 ஏதிலிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையைச் சேர்ந்த 48 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 82 பேரும் ஏதிலி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ள போதும், அவர்களது விண்ணப்பங்கள் […]
“தல புட்டுவா” வை சுட்டுக்கொன்ற ஐவர் கைது
கல்கமுவ பிரதேசத்தில் ” கல்கமுவே தல புட்டுவா” என அழைக்கப்படும் யானையொன்றைக் கொன்றமை தொடர்பில் ஐந்து சந்தேகநபர்களை அம்பன்பொல பொலிஸார் கைதுசெய்துள்னர். கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து யானையின் தந்தம் மற்றும் யானைத் தந்தங்களை வெட்டுவதற்கு பயன்படும் வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாகவும் அனைவரும் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாட்டிறைச்சி தடை: வாபஸ் வாங்கும் மோடி அரசு??
நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை, உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகள் கொல்வதை தடை செய்யும் உத்தரவு வாபஸ் பெறப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாராஷ்டிர அரசு மாட்டிறைச்சிக்காக பசுக்களை விற்க தடை விதித்தது. இதன் பின்னர், கடந்த […]
ஓகி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரங்கள்
நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை துவம்சம் செய்த ஓகி புயல் இன்று திருவனந்தபுரத்தின் மேற்கு திசையில் 230 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த புயல் லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே குமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களில் இனி புயல் அபாயம் இல்லை என்றும் இருப்பினும் ஓரிரு நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அடித்த […]





