Other News

143 நாள் வீதியில் இருந்தும் தலைவிதி மாறவில்லை – வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவலை

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.12.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினரால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. இப் போராட்டத்தில் கலந்து கொண்ட வேலையற்ற பட்டதாரிகள் 20,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியமனம் எங்கே?, எதிர்கட்சி தலைவரே ஏன் மௌனம், நியமன இழுத்தடிப்பு எதற்காக?, அரசே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எங்கே?, 143 நாள் வீதியில் இருந்தோம் தலைவிதி மாறவில்லை, பேச்சுவார்த்தை போதும் நியமனம் வழங்கு, […]

மட்டக்களப்பில் மீனவர்களின் வலைகளில் பாம்புகள்

மட்டக்களப்பு – நாவலடியில் இன்று காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் சிக்கியிருந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் தங்களது வாழ்கையினை கொண்டு செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், காலநிலை மாற்றங்கள் ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளதாவென மக்கள் மத்தியில் […]

எதிர்வரும் ஐந்தாம் ஆறாம் திகதி வானிலை அறிவிப்பு

தற்போது தெற்கு அந்தமான் தீவிற்கு அருகில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் தினங்களில் அதிகரித்து மத்திய வங்காள விரிகுடா ஊடாக இந்தியாவிற்குள் நுழைவதை காணமுடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இது இலங்கையின் கிழக்கு திசையில் நாட்டுக்கு அருகில் பயணிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களினால் இதன் பயணப்பாதை மாற்றமடையலாம் என்பதுடன், இதன் புதிய நிலை […]

மைத்திரி மஹிந்த

மைத்திரி – மஹிந்த இணைய வேண்டும்- தி.மு.ஜயரட்ன

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து சிறிலங்கா சுதந்திர கட்சியை மீண்டும் வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அந்த கட்சி பிளவுபடும் நிலையில் இருந்த போதும் தற்போது வரை உடையாமல் பயணித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கான கேள்விப்பத்திர திறப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த வீட்டுத் திட்டத்துக்காக சுமார் 40 நிறுவனங்கள் கேள்விப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளன. இந்த கேள்விப் பத்திரங்கள் கடந்த மாதம் திறக்கப்பட முடிவுசெய்திருந்தபோதும், அந்தப் பணிகள் பிற்போடப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த கேள்விப்பத்திரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட உள்ளதாக தேசிய […]

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபா!

கடந்த 11 மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலருடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 2.5 வீதம் அமெரிக்க டொலர் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வங்கி குறிப்பிட்டுள்ளது. யூரோவுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 13.3 வீதம் ரூபாய் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் வங்கியின் பெறப்பட்ட முழுமையான சொத்தின் பெறுமதி 9.6 […]

லட்சத்தீவுகளில் பயங்கர மழை

வங்க கடலில் கன்னியாகுமாரி அருகே நிலை கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியை கனமழை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி சென்றது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது. அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு மேலே நிலை கொண்டுள்ள ஓகி புயலின் தாக்கத்தால் லட்சத்தீவுகளில் பலத்த […]

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 20 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தி துறை பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்களும் நாகை, காரைக்கால் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததுடன் தடை செய்யப்பட்ட வலையுடன் மீன் பிடித்ததாக இலங்க கடற்படை குற்றம் சாட்டி, மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 20 தமிழக மீனவர்களும், காரைநகர் […]

இந்திய – இலங்கை கடற்படையினர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை

இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையில் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் தெரிவித்துள்ளார். கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதமாக அவர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய கடற்படையின் […]

இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு

தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள பேரூந்து ஒன்றில் ‘இது சிங்களவர்களுக்கான ஒரே நாடு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச நடனத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தென்பகுதியில் இருந்து வந்த பேரூந்தின் பின்னாலேயே மேற்படி வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் தற்போது இனவாதம் களையப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.