Other News

வடக்கில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைக்க நிதி

வடக்கு மாகாணத்தில் 273 விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்காக 100 விவசாயிகளுக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் நேற்று மாலை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 50 ஆயிரம் ரூபா தொடக்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை மதிப்பீட்டுக்கு அமைவாக 273 விவசாயக் கிணறுகளைச் சீரமைக்க 100 விவசாயிகளுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன. […]

விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்

ரஜினி, கமல், விஜய் போல் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிராமல் வெற்றியோ, தோல்வியோ களமிறங்க முடிவு செய்துவிட்ட விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பிரபலங்கள் கூறியதை பார்ப்போம் இயக்குனர் அமீர்: சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன? […]

க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை உடன் அறிவிக்கலாம்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தொடர்பிலான பிரச்சினைகளை 1911 என்ற தொலைபெசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை பரீட்சாரத்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாடசாலை அதிபருக்கும், தனியாருக்கான அனுமதிப்பத்திரங்கள் பரீட்சாரத்திகளின் விலாசத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார். 4 29, 493 பாடசாலை பரீட்சாரத்திகளும், 259,080 தனியார் பரீட்சாத்திகளும் இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இதன்பிரகாரம் […]

ஊடகவியலாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் சர்வதேச தின மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைக்கு எதிரான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் மாநாடு இலங்கையில் நாளை நடைபெறவுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறும் செயலமர்வில் முக்கிய உரையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்த்தவுள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சு மற்றும் அரச தகவல் திணைக்களமும் இணைந்து முன்னெடுக்கும் இந்த மாநாட்டில் […]

மாற்றத்தின் மூலம் நிலையான மகிழ்ச்சி

உடலளவில் பலவீனமாக இருந்தாலும், உள்ளத்தில் தைரியமாகவே இருப்பவர்களே மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்துள்ளன. இதனை பார்க்காமல் உடல் குறையை மட்டும் வைத்து, அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, உரிமை, வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல் டிச.3ம் தேதி, ‘சர்வதேச மாற்று திறனாளிகள் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ‘மாற்றத்தின் மூலம் நிலையான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை அனவருக்கும் உருவாக்குவோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. […]

மீனவர்களின் வலையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்!

மட்டகளப்பில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ள நிலையில் இது உண்மையில் பாம்பா? அல்லது ஒரு வகை மீன் இனமா? என பல கேள்விகள் எழுந்தவண்ணமே உள்ளது. உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி எனப்படும் பாம்பு இனம் என்பதே இதன் பெயராக உள்ளது. இந்த பாம்பினத்தை சிலர் ஆரல் மீன் எனுவும் அழைக்கின்றனர். ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்கும் […]

இன்றைய ராசிபலன் 03.12.2017

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நுழைந்திருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து  கொடுத்துப் போவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். முக்கிய கோப்புகளை […]

வீடுகள் தாழிறக்கம், வெடிப்புகளால் மக்கள் இடப்பெயர்வு

வீடுகள் தாழிறக்கம் மற்றும் வீடுகள் வெடிப்புற்று காணப்படுவதன் காரணமாக, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாமிமலை – ஓல்டன் பகுதியை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் மேற்பிரிவு, கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்த ஆகிய தோட்டத்தில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியில் தாழிறக்கம் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன. அத்துடன், குடியிருப்பு பகுதியில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு நீர் வெளியேறுவதனால் அச்சம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 25 குடும்பங்களை […]