சமீபத்தில் தமிழகம், கேரளாவை தாக்கிய ஓகி புயலை அடுத்து டெம்பின் என்ற புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை மிக கோரமாக தாக்கியுள்ளது. இந்த புயலுக்கு இப்போது வரை 200 பேர் பலியாகியுள்ளதாகவும், மீட்புப்பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானவ் மாகாணத்தில் டெம்பின் புயல் நேற்று ருத்ரதாண்டவம் ஆடியது. புயல் மற்றும் இடைவிடாத கனமழையால் அந்நாட்டின் […]
Other News
இன்றைய ராசிபலன் 25.12.2017
மேஷம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளை கள் உங்கள் பேச்சிற்கு மதிப் பளிப்பார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள். ரிஷபம்: செயலில் வேகத்தை காட்டுவீர்கள். சகோதர வகை யில் பயனடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் […]
ஆரம்பமானது புதிய கூட்டமைப்பின் ஒன்று கூடல்.!
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் களமிறங்கும் புதிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது. குறித்த கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியது. புதிய தேர்தல் முறை பற்றிய விடயங்கள், தேர்தலின் போது வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குவிதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக இதில் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த கருத்தரங்கில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவ […]
சன்னிலியோனின் முதல் தமிழ்ப்பட டைட்டில் என்ன தெரியுமா?
ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன், முதன்முதலில் தமிழில் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகவுள்ளது வடிவுடையான் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் வரும் 27ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்திற்காக சன்னிலியோனுக்கு நயன்தாராவுக்கு […]
இரட்டை இலையில் வெற்றி பெற்ற மூவர் தினகரனுக்கு ஆதரவு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இருந்தே பெரும் ஆதரவு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனிடம் இருந்து பிரிந்து சென்ற அதிமுக எம்பி செங்குட்டுவன் தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ஸ்லீப்பர் செல்கள் என்று சொல்லக்கூடும் பலர் தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சி […]
தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த விஷால்
சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்ற தினகரனின் அணிக்கு அதிமுகவின் பல தலைவர்கள் வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனை உறுதி செய்வதை போல் வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை நேரில் சந்தித்து ஆதர்வு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தினகரனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் […]
தினகரன் வெற்றியால் தமிழக மக்கள் அதிர்ச்சி: ஓபிஎஸ் அறிக்கை
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே மைனாரிட்டி அரசு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆளும் கட்சி என்ற அதிகாரம், இரட்டை இலை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, வலுவான வேட்பாளர் ஆகியவை இருந்தும் தினகரன் பெற்ற வாக்குகளில் இருந்து பாதி வாக்குகளைத்தான் அதிமுக பெற்றுள்ளது. இந்த நிலையில் தினகரனின் வெற்றி குறித்து துணண முதல்வர் ஓபிஎஸ் தனது […]
போருக்கு அடிக்கற்கள்: வடகொரியா பகிரங்க மிரட்டல்!!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால், வட கொரியா மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியா சமீபத்தில் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடியாக, அந்நாடு மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக வாக்களித்துள்ளது. வட கொரியா மீதான புதிய தடைகள்: # வட கொரியாவின் பெட்ரோலிய […]
எமது ஆட்சியில் குற்றவாளிகளை தண்டிப்போம்.!
நல்லாட்சி என்ற பெயரில் நாட்டினை நாசமாக்கியதில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எவ்வாறு பொறுப்புக் கூட வேண்டுமோ அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் பொறுப்புக்கூறியாக வேண்டும். மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரித்து நாட்டினை நாசமாகியுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குற்றவாளிகளையும் தண்டிக்கவும் தயங்க மாட்டோம் […]
புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஜனவரி மாத முதல் வாரத்தில்
மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய ஸ்ரீ லங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் கடுவெல நகர வாராந்த சந்தைக் கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு […]





