தமிழக சட்டசபையின், இந்த ஆண்டுக் கான முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. அவை மரபுப்படி, இன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார். இதற்காக, காலை 9.55 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திற்கு வரும் அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள். சட்டசபைக்குள் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சபாநாயகர் […]
Other News
‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம்
அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். இந்த ‘பாபா’ முத்திரை அவரது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மேடையில் பொறிக்கப்பட்டு இருந்ததுடன், அவரது ரசிகர்களும் அந்த முத்திரையுடன் கூடிய அட்டைகள், கொடி போன்றவற்றை […]
இன்றைய ராசிபலன் I 08.01.2018 I
மேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,வெளிர் நீலம் ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் […]
முடியை கோதிவிட்டா- மேடையை அதிர வைத்த ரஜினி ஸ்பீச் !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் யாராலும் அசைக்க முடியாமல் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார். இந்நிலையில் நேற்று மலேசியாவில் பிரமாண்ட கலை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரஜினி தன் மலரும் நினைவுகளை மக்களுடன் பகிர்ந்து கொண்டார், அப்போது பேருந்து நடத்துனராக இருக்கும் போது ‘சும்மா முடியை கோதிவிட்டு ஏறி 5 நிமிஷத்தில் டிக்கெட் போட்டு விடுவேன். இதையே தான் பாலசந்தர் அவர்களிடம் செய்து காட்டினேன், அவர் இதை […]
மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!
மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர். மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார். கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். […]
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்
சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை. தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சீமான் எழுப்பிய கேள்விக்கு நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும் இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போல், கால்பந்து போட்டியின் […]
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்
நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். […]
இராமநாதபுரம் தாக்குதல்: தாயும், மகனும் மறியலில்
இராமநாதபுரம் – மாயவனூர் பகுதியில் மூன்று வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபரின் தாயாரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – என்று இராமநாதபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி சதுரங்க தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: மாயவனூர்ப் பகுதியில் இருதினங்களுக்கு முன்னர் இரவுவேளையில் வீடுகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டன. ஏழு பேர் கொண்ட குழு வீடுகளுக்குள் புகுந்து தாக்கியது. […]
பூநகரியில் நள்ளிரவு விபத்தில் ஒருவர் சாவு!!
பூநகரி, செல்விபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். விபத்துக்குக் காரணமானது எனக் குற்றஞ்சாட்டப்படும் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். சாரதியைக் காப்பாற்றுவதற்காக விபத்துக்குக் காரணம் உயிரிழந்தவர் பயணித்த உந்துருளி (மோட்டார் சைக்கிள்) மாட்டுடன் மோதுண்டதே என்று பொலிஸார் ஏமாற்ற முற்படுகின்ற னர் எனச் சந்தேகம்கொண்ட உறவினர்கள் சடலத்தைப் பொறுப்பேற்கமாட்டோம் என்று கூறிப் போராட்டம் நடத்த முற்பட்டதால் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் […]





