Other News

Ranil

சிங்கப்பூருக்கு பறந்தார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே பிரதமர் சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில் பிராந்தியத்தின் முக்கியமான முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கு முன்னதாக, இலங்கையில் முதலீடு என்ற பெயரிலான மாநாடுகள், அமெரிக்கா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன.

காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமனம்

காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு உறுப்பினர்களின் நியமனங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கீகாரம் அளித்துள்ளார். ஜனாதிபதியின் சட்டவாளர் சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், கலாநிதி சிறியானி […]

ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர்(82) கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். அந்நிலையில் நேற்று காலை ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் […]

கடைசி வரை நிம்மதி இல்லாமல் வாழ்ந்த ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்கத் தொடங்கியது முதல் மரணமடையும் வரை நிம்மதியில்லாமல்தான் வாழ்ந்து வந்தார் என பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஸ்ரீதேவியின் அழகில் மயங்கி அவரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில்தான் நான் சினிமா இயக்குனரானேன். அவருடன் 2 படங்களில் பணியாற்றியுள்ளேன். அவருடைய சொந்த வாழ்க்கை எனக்கு தெரியும். அவரை தேவதை என்றும் 20 […]

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நல்லமுறையில் தேறி வருவதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் பேசிவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் கருணாநிதி தனது பேரனின் மகனுடன் அதாவது மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. கருணாநிதி […]

நீதிக்கு நீதி வேண்டும் என்று மத்திய அமைச்சரை கேட்கும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என கூறிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நீதிக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட […]

இன்றைய ராசிபலன் 01.03.2018

மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத் தது நிறைவேறும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை […]

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 நிமிட லிப் டூ லிப்

தினமும் 5 நிமிடம் லிப் டூ லிப் முத்தம் உடலின் ஆரோக்கியம் மேம்படுத்த உதவும். அன்பை பறிமாற முத்தம் கொடுப்பது வழக்கம். முத்தம் புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமல்லாமல் உடலிற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும். குறிப்பாக லிப் டூ லிப் முத்தம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தினமும் 5 நிமிடம் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அடிக்கடி முத்தம் கொடுக்கும் போது உடலில் அட்ரினலின் […]

சிங்களமயமாகும் கிளிநொச்சி வைத்தியசாலை : தமிழர்கள் அதிர்ச்சி

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் தமிழ் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கிவருவதாக மக்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தனர். கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மருத்துவச் சேவையை நாடிவருகின்றனர். ஆனால், இந்த வைத்தியசாலையின் அண்மைக்கால போக்குகள் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முல்லைத்தீவுக்கு அடுத்தபடியாக கிளிநொச்சி மாவட்டமே காணப்படுகிறது. யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. […]

சசிகலா முதல்வராவதை

இதிமுக-வாக மாறிய லதிமுக

லதிமுக என்கிற தனது கட்சி பெயரை இதிமுக என பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.ராஜேந்தர். நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்திர், தமிழக மக்களை காக்க நாளை முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். அதன்படி, இன்று 11 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். அந்த பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் […]