Other News

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 04.05.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள். […]

டிரம்ப் நிர்வாண சிலையை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்த ஆராய்ச்சியாளர்

டிரம்ப்பின் நிர்வாண சிலையை ஆராய்ச்சியாளர் ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரது நிர்வாண சிலை ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த சிற்பி ஒருவர் அவரது கை வண்ணத்தால் உருவாக்கினார். இந்த சிற்பம் அவர் அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் 2016-ஆம் ஆண்டு வைக்கப்பட்டிருந்து. இந்த சிலையை ஜுலீயன் நிறுவனம் ஏலம் […]

இன்றும் நாளையும் ஐதராபாத்தில் பயங்கர அனல் காற்று வீசும்- தெலுங்கானா அரசு எச்சரிக்கை

ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் அதிக வெயில் கொளுத்துகிறது. ஐதராபாத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் ஐதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் மேலும் அதிகமாக வெயில் கொளுத்தும் என்றும், பயங்கர அனல் காற்று வீசும் என்றும் தெலுங்கானா அரசு எச்சரித்துள்ளது. இந்த 2 நாட்களிலும் 108 டிகிரி […]

வட மாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் – உ.பி.யில் 42 பேர் பரிதாப பலி

வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதி புயலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஏராளாமானோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஆக்ரா […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 03.05.2018

மேஷம்: இரவு 8.17 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சோர்வாக காணப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். இரவு 8.17 மணி முதல் சந்திராஷ்டமம் […]

உலகின் முதலாவது ஆணுறுப்பு மாற்று சத்திர சிகிச்சை பெரு வெற்றி

அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் அடி வயிறு பகுதியில் ஆணுறுப்பு உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்காக அவர் மேரிலேண்டில் உள்ள பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் சிகிச்சை மேற்கொண்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி செயல்பட செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து அவருக்கு மரணம் அடைந்த ஒரு நபரின் உறுப்பை தானமாக […]

தெற்காசிய தடகளம்- தமிழக வீரர்கள் 9 பேர் தேர்வு

3-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன் ஷிப் போட்டி கொழும்பில் வருகிற 5 மற்றும் 6-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த 9 வீரர்- வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஆண்கள் பிரிவில் நிதின் சிதானந்த் (200 மீட்டர் ஓட்டம்), ராஜேஷ் ரமேஷ் (400 மீட்டர் தொடர் ஓட்டம்), கமல்ராஜ் (டிரிபிள் ஜம்ப்), சந்தோஷ் மணிகண்டன் (உயரம் தாண்டுதல்) ஆகியோரும், பெண்கள் பிரிவில் சுபா (200, 400 […]

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி […]

இடி மின்னல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் தொழில்நுட்பம் – ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டில் மட்டுமே மின்னல் தாக்கியதில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக புவனேஸ்வரில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலர் ஏ.பி.பதி கூறுகையில், ‘மின்னல் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கக் கூடிய தொழில்நுட்பம் சில மாநிலங்களில் நல்ல பலனளித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் நமது மாநிலத்திற்கான பயன்பாடு மற்றும் பொருந்தும் தன்மை குறித்து ஆய்வு […]

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

.திருச்செந்துார் முருகன் கோவில், முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திகழ்கிறது. கடற்கரையை ஒட்டி இருக்கும் கோவிலில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். இப்போது, கோடை விடுமுறை என்பதால், கூட்டம் அதிகரித்துள்ளது.நேற்று பகல், 11:00 மணியளவில், திருச்செந்துார் கடல் திடீரென உள்வாங்கியது. 50 மீட்டர் அளவுக்கு கடல் உள்வாங்கியதால், பாறைகள் வெளியே தெரிந்தன. கடலில் குளித்து கொண்டிருந்த பக்தர்கள் வியப்படைந்தனர். மாலை, 3:00 மணியளவில், கடல் பழைய […]