வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோர் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. வெகு விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச இருக்கிறார். கிம் – மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. […]
Other News
இன்றைய ராசிபலன் 05.05.2018
மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை […]
மூன்று நாடுகளுக்கு பயணம் செய்கிறார் வெங்கையா
புதுடில்லி: துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக 5 நாள் பயணமாக 3 நாடுகளுக்கு செல்கிறார். இது குறித்து துணை ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாவது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரும் 6-ம் தேதி கவுதமாலா சென்று அங்கு அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா ஆகியோரை சந்திக்கிறார். 7-ம் தேதி பனாமா செல்கிறார். அங்கு பனாமா அந்நாட்டு அதிபர் ஜுவான் […]
24 மணி நேரத்தில்… 250 நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு
அமெரிக்காவில் ஹவாய் தீவுகளில் 24 மணி நேரத்தில் தொடர்ந்து 250 நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து தற்போது எரிமலை வெடித்து அவசர அவசரமாக மக்கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென எரிமலை வெடித்து சாலை வரை எரிமலை குழம்பு பீறிடத்துவங்கியுள்ளது. சாலைகளில் விரிசல் ஏற்பட துவங்கியுள்ள நிலையில், எந்நேரமும் எரிமலை குழம்பு வெளியேறலாம் என்ற காரணத்தால், […]
இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த காதலன் : நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்
குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி கற்பழித்த வாலிபரும், அவரின் நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவடம் அரூர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண்ணிற்கும், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த நைம் மாலிக்(24) என்கிற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. எனவே, அவர்கள் இருவரும் சேலத்தின் பல இடங்களுக்கும் சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, சேலத்திற்கு […]
தமிழகம் வந்தார் ஜனாதிபதி: சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்-முதல்வர் வரவேற்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த வரவேற்பைத் தொடர்ந்து ராணுவ […]
ஏழைத் தமிழ் மாணவர்களை நீட் எழுத அலைக்கழிப்பது அநீதி – கமல்ஹாசன்
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் […]
ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட பொன்.ராதாகிருஷ்ணன்
அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி கிராம தன்னாட்சி திட்டத்தின்படி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் கிராமங்களுக்கு சென்றடைகிறதா? என ஆய்வு செய்யும்படி மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.. அதன்படி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குமரி மாவட்டத்தில் தடிக்காரன்கோணம், திக்கணங்கோடுபுதூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு செய்தார். நாகர்கோவிலை அடுத்த மேலகருப்பு கோட்டை கிராமத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சென்று ஆய்வு நடத்தினார். வீதிகள் தோறும் சென்று மக்களை சந்தித்து […]
வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை – மின்தடையால் பொதுமக்கள் அவதி
வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி 108 டிகிரியும், இந்த மாதம் (மே) 1-ந்தேதி 107 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் […]
மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியில் நஜிபுனிஷா என்பவருக்கு சொந்தமான 2 மாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே கட்டிடத்தில் மர இழைப்பகமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 30-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏதோ […]





