பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ ஜாங்வி பயங்கரவாத இயக்கத்தினர் ஸ்பிளிங்லி, காபு மலைப்பகுதிகளில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினரும், போலீஸ் படையினரும் அந்தப் பகுதிகளை கூட்டாக சென்று சுற்றி வளைத்தனர். எல்லை பாதுகாப்பு படையினரின் வாகனத்தை பார்த்ததுமே பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த […]
Other News
இன்றைய ராசிபலன் 02.05.2018
மேஷம்: சந்திராஷ்டமம் தொட ர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் அவ்வப் போது கோபப்படுவீர்கள். விமர்சன ங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறைக் கூறுவார். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் […]
பருத்தித்துறையில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு
பருத்தித்துறை, கற்கோவளத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாள்வெட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர். பருத்தித்துறைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர் பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையிலேயே நான்காவது சம்பவமாக இது நடந்துள்ளது. பருத்தித்துறை, சுப்பர்மடம், தும்பளை ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருடைய அணுகுமுறையில் சந்தேகம் […]
வாகன விபத்தில் 25 பேர் காயம்
குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று எரிபொருள் ஏற்றிவந்த வாகனத்தின் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்ட்டனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
ஆசிரியையின் கூந்தலை அறுத்துக் கொடுமை கொக்குவிலில் சம்பவத்தின் பின்னனி
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக் குள் புகுந்த இருவர் அங்கிருந்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஆசிரியையும், தாயும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.45 மணியளவில் கொக்குவில் மூன்றாம்கட்டையில் (தாவடிக்கு அண்மையில்) நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியையின் கூத்தலை வெட்டிக் அவரைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்தினர். […]
மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
நம் வீட்டிலிருந்து திருஷ்டி தோஷம் போக்க
வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். இப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்வார்கள். அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும். அன்று முதல் வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு காயங்கள் ஏற்படும். பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம் தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும். இத்தகைய பொறாமை […]
அணு ஆயுதங்கள் குறித்து இரான் பொய் கூறுகிறது – இஸ்ரேல்!
அணு ஆயுத திட்டத்தை இரான் ரகசியமாக தொடர்ந்து வந்துள்ளதை நிரூபிக்கும் “ரகசிய அணு கோப்புகள்” என்ற சில கோப்புகளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு வெளியிட்டுள்ளார். அணு ஆயுதங்களை சோதனை செய்யவில்லை என்று கூறி இரான் உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளதை காட்டும் ஆயிரக்கணக்கான பக்கங்களுடைய ஆவணங்கள் இஸ்ரேலுக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன் மீதான தடைகளை நீக்குவதற்கு பிரதிபலனாக அணுத் திட்டத்தை 2015ஆம் ஆண்டு கைவிட இரான் ஒப்புக்கொண்டது. அணு […]
இன்றைய ராசிபலன் 01.05.2018
மேஷம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். ரிஷபம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை கூடி வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் […]
ஆப்கானிஸ்தானில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனத்தின் அருகில் தற்கொலைப்படையினரால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மற்றோரு குண்டும் வெடித்தது. அப்போது அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் இருந்தனர். இதனால் பலர் […]





