Other News

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 09.05.2018

மேஷம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோக த்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாள். ரிஷபம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் […]

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ஆதாரத்துடன் கூறுகிறார் நெடுமாறன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது; பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன? வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் […]

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உண்ணாவிரதம்!

உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்காவும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்குவகிக்கிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க குடலில் உள்ள ஸ்டெம் செல்கள் ஸ்டெம்செல்கள் திறம்பட செயல்படுவதில்லை. இதனால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதை ஆராய்ச்சியாளர்கள் […]

சிரியா போர்: குடும்பத்தோடு வெளியேறும் சிரியா போராளிகள்

போரால் சிதைந்துள்ள சிரியாவில் தங்களின் கடைசியாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஸ்டன் பகுதியை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் சிரிய கிளர்ச்சியாளர்கள். மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மற்றும் ஹாமாவுக்கு இடையிலான ஒரு பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போராளிகள் தங்களின் குடும்பத்தோடு பேருந்து வழியாக வெளியேறி வருகின்றனர். சிரியா அரசு மற்றும் அதன் ரஷ்ய கூட்டணியுடன் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவில் எதிராளியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசத்திற்கு இப்போராளிகள் பாதுகாப்பாக […]

விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2

தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். 100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் […]

ஜெ.வின் நினைவு மண்டபத்தில் இரட்டை இலை?

மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 08.05.2018

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். […]

நீட் தேர்வு! மாணவியின் தந்தை நெஞ்சு வலியால் திடீர் மரணம்

நீட் தேர்வுக்காக மகளுடன் புதுவை வந்த சீனிவாசன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலமானார். நீட் தேர்வுக்காக தமிழக மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தது நாம் அனைவரும் அறிந்ததே. பல்வேறு கட்டுப்பாடுகள், மொழி தெரியாத மாநிலங்களில் தேர்வு மையம், தங்கும் வசதி, போக்குவரத்து செலவு என பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும். எர்ணாகுளத்தில் மகனுக்காக காத்திருந்த தந்தை கிருஷ்ணசாமி உயிரிழந்த சோகம் […]

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டவிரோத குடியேறிகள் விடயத்தில் அவுஸ்திரேலியா கடுமையாக நடந்து கொள்ளும் என்று அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லவிருந்த 131 இலங்கையர்கள், மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்தே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைப்பகுதிக்கு இன்னும் ஆபத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவுஸ்திரேலியா தமது எல்லைப்பகுதி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டியுள்ளதையும் குடிவரவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பயன்பாட்டில் இல்லாத 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க ரெயில்வே முடிவு

நாடு முழுவதும் வளர்ச்சிப்பணிகளுக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே இலாகா கையகப்படுத்தியது. இது தவிர அகல ரெயில் பாதை திட்டத்துக்காகவும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகல ரெயில் பாதைகளாக மாற்றப்பட்டு விட்டன. இந்த பாதைகள் அகற்றப்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் அப்படியே வீணாக கிடக்கிறது. இதையடுத்து தன்னிடம் உபரியாக உள்ள 12 ஆயிரத்து 66 […]