Other News

அசோக ரன்வலவுக்கு பிணை

அசோக ரன்வலவுக்கு பிணை

முன்னாள் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முன்னதாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் இன்று(12) அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் மற்றுமொரு பேரழிவை சந்திக்கும் - ட்ரம்ப்

ஈரான் மற்றுமொரு பேரழிவை சந்திக்கும் – ட்ரம்ப்

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒப்பந்தம் இல்லாமல் புதுப்பிக்க முயன்றால், அது மற்றொரு பேரழிவு தரும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

வெனிசுவேலா ஜனாதிபதிக்கு அமெரிக்காவில் தடை

வெனிசுவேலாவின் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதையடுத்து, வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து […]

காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!

காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். காசா அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், அமைதி திட்டத்தை விரிவுப்படுத்துவது மற்றும் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அமைதி திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து […]

சொந்த மகள்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: தந்தையின் வெறிச்செயல்

சொந்த மகள்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம்: தந்தையின் வெறிச்செயல்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு […]

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி

அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு […]

டிசம்பர் 14 வரை இலங்கைக்கு ஆபத்து! - நாகமுத்து பிரதீபராஜா

டிசம்பர் 14 வரை இலங்கைக்கு ஆபத்து! – நாகமுத்து பிரதீபராஜா

இலங்கை முழுவதிலும் இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுக்களின் வருகையும் இருக்கும். எனவே, இன்று முதல் எதிர்வரும் 14ஆம் […]

அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன!

அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால விநியோகப் பொருட்களான,கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை கொண்டு செல்ல இந்த அணி இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இந்த […]

எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அனர்த்தத்தைத் தடுக்க முடியாது! - சரத் பொன்சேகா

எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அனர்த்தத்தைத் தடுக்க முடியாது! – சரத் பொன்சேகா

இலங்கையில் கடந்த நாட்களில் நிலவிய அதிதீவிர காலநிலையைத் தடுப்பதற்குத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலங்களின் போதும், இது போன்ற நிலைமை ஏற்பட்டிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இது போன்ற அனர்த்தம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால ஆட்சியாளர்கள் ஆட்சியில் […]

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - ஒருவர் கைது

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெஹிவளை- “ஏக்வாடஸ்” விளையாட்டு மைதானம் அருகே சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவானது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த 34 வயதுடைய பொதுமகன் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.