உலக செய்திகள்

பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமனம்

உலகம் முழுவதுமுள்ள பெண் குழந்தைளுக்கான கல்வி உரிமையை ஊக்குவிப்பதற்காக ஐ.நா சபையின் அமைதித் தூதராக மலாலா யூசுப்சாய் நியமிக்கப்பட உள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளி மாணவி மலாலா யூசப்சாய், பெண் குழந்தைகளுக்கான கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பின்னர், பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிர் பிழைத்த அவர், அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே […]

சிரியா விமானப்படை தளம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்காவுக்கு ரஷியா கண்டனம்

சிரியா நாட்டின் விமானப்படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் புரட்சிப் படையினரின் பதுங்குமிடத்தின்மீது அந்நாட்டின் விமானப்படை ரசாயன ஆயுதங்களை வீசி நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் துடிதுடித்து உயிரிழந்தனர். சர்வதேச மனித உரிமைகளை மீறிய வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு உலகில் உள்ள […]

ஆஸ்திரேலியாவில் ஆறு உடைந்ததால் மூழ்கிய நகரம்

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் ராக் கேப்டால் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி வெள்ளத்தால் மூழ்கியது. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பகுதியில் கடந்த வாரம் புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பிட்ஸ்சோவி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் […]

வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா

கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. ஐ.நா. பொருளாதார தடை, உலக நாடுகளின் கண்டனம் என எதையும் பொருட்படுத்தாமல் […]

சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது

சிரியாவில் நடந்த விஷ வாயு தாக்குதலில் நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படுத்தும் வேதிபொருள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளதென உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 7–வது ஆண்டாக நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் […]

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்: ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறுதல்

இந்தியா உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என, ரஷிய பிரதமர் புதினுக்கு இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் மூலம் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்த படியாக 2-வது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று ஒரு மெட்ரோ ரெயிலில் குண்டு வெடித்ததில் 2 பெட்டிகள் கடும் சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். […]

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது: நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு கடும் எச்சரிக்கை

எச்.1 பி விசாக்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று அந்நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி விசா’ வழங்கி வருகிறது.இந்த விசாக்கள் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளில் பலவற்றிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி […]

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் […]

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக பலி

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேக் தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். அமெரிக்காவின் கொலம்பியா மருத்துவ கல்லூரியில் கெய்ட்லின் நெல்சன் (20) என்பவர் படித்து வந்தார். அந்த் அக்ல்லூரியில் பான்கேக் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது, அதில் கெய்ட்லின் கலந்துகொண்டார். போட்டியின்போது, 4 துண்டு கேக்குளை இவர் சாப்பிட்டபோது அவரது தொண்டையில் அடைத்து நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உணவு ஒவ்வாமையால் […]

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக 14 ஆக உயர்வு

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோ ரயிலில் வெடி குண்டு வெடித்தத சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ரஷியாவில், தலைநகர் மாஸ்கோவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இரண்டு மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 மெட்ரோ ரெயில் பெட்டிகளில் நேற்று குண்டுகள் வெடித்தன. கேட்பார் இன்றி கிடந்த பொருட்களில் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த குண்டு […]