அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் தென் கொரியா வருகையாலும், வட கொரியா ராணுவ பயிற்சியாலும் கொரிய தீபகற்பத்தில் போர்பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா.வின் உத்தரவு மற்றும் பொருளாதார தடையை எதிர்த்து வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியா மீது தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். தற்போது […]
உலக செய்திகள்
வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ள ஏவுகணை எதிர்ப்பு கவன் அமைப்பதில் அமெரிக்கா தீவிரம்
ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கி அழிப்பதற்காக வட கொரியா ஒத்திகை பார்த்துள்ள நிலையில் வட கொரியாவின் சவாலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு கவன் அமைக்கும் பணியில் அமெரிக்க ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச […]
ஏஞ்சலே மார்க்கல் உடன் அதிபர் டிரம்ப் தொலைபேசியில் திடீர் ஆலோசனை
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியா, ஏமன் மற்றும் வடகொரியா விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலே மெர்க்கல் உடன் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசினார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் சூழல் குறித்து டிரம்ப் ஆலோசனை நடத்தினர். மற்றும் வடகொரியா […]
534 நாட்கள் விண்வெளியில் தங்கி சாதனை படைத்த ‘நாசா’ வீராங்கனை: டிரம்ப் வாழ்த்து
534 நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி சுட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். […]
எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான்கள் வெறியாட்டம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் 8 போலீசாரை சுட்டுக் கொன்று தாலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தாக்ஹர் மாகாணத்தில் உள்ள தார்குவாத்தில் நேற்று போலீசார் மற்றும் தாலிபான் தீவிராவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த தாக்குதலில் 8 போலீசார் பலியாகினர். மேலும், 3 போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசாரை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல் தார்குவாத் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு […]
அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை மூழ்கடிக்க தயார்: வடகொரியா
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார் என்று வடகொரியா, அமெரிக்காவை மிரட்டி உள்ளது. வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் […]
வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம்: டிரம்ப்புக்கு சீன அதிபர் ஆலோசனை
கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை வைத்து மிரட்டிவரும் வடகொரியாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு சீன அதிபர் க்சி ஜின்பிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு […]
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகல்
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் தற்போதைய இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். […]
ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலி
ஆல்பஸ் மலையின்மீது சாகசப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிய இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய வீரர் வேன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நாட்டின் பிரபல சைக்கிள் பந்தய குழுவான அஸ்டானா குழுவில் சைக்கிள் பந்தய வீரராக திகழ்ந்தவர், மைக்கேல் ஸ்கார்போனி(37). உள்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சைக்கிள் பந்தயங்களில் பங்கேற்றுள்ள இவர் அன்கோனா மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள பிலோட்ரானோ நகரில் வசித்து வந்தார். […]
அமெரிக்காவில் பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணையங்களில் ஊடுருவல் – ரஷிய எம்.பி. மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தமான இணைய தளங்களில் ஊடுருவி கிரெடிட் கார்ட் தகவல்களை களவாடி 16.9 கோடி டாலர்கள் இழப்பு உண்டாக்கிய ரஷிய நாட்டு பாராளுமன்ற எம்.பி.யின் மகனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரோமன் செலெஸ்னேவ்(32). ரஷிய பாராளுமன்ற உறுப்பினர் வலேரி செலெஸ்னேவ் என்பவரின் மகனான இவர் கடந்த 2014-ம் ஆண்டு மாலத்தீவு நாட்டுக்கு சென்றிருந்தபோது திடீரென்று மாயமானார். அவர் அமெரிக்க உளவுத்துறையினரால் கடத்தப்பட்டது […]





