உலக செய்திகள்

85,000 அமெரிக்க விசாக்கள் ரத்து

85,000 அமெரிக்க விசாக்கள் ரத்து

இவ்வாண்டின் ஆரம்பம் முதல், இதுவரையான காலப்பகுதியில் 85,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமுல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஹெச் 1பி விசாவுக்கு புது கட்டுப்பாடுகள், சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் […]

ஈரான் மற்றுமொரு பேரழிவை சந்திக்கும் - ட்ரம்ப்

ஈரான் மற்றுமொரு பேரழிவை சந்திக்கும் – ட்ரம்ப்

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை ஒப்பந்தம் இல்லாமல் புதுப்பிக்க முயன்றால், அது மற்றொரு பேரழிவு தரும் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி திறன்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். […]

வெனிசுவேலா ஜனாதிபதிக்கு அமெரிக்காவில் தடை

வெனிசுவேலாவின் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வெனிசுவேலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதையடுத்து, வெனிசுவேலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து […]

காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!

காசாவில் நிறைவடையும் அமைதி திட்டம் – ட்ரம்ப்பை சந்திக்கும் நெதன்யாகு!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார். காசா அமைதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், அமைதி திட்டத்தை விரிவுப்படுத்துவது மற்றும் ஹமாஸின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இதன்போது கலந்துரையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பாலஸ்தீனப் பகுதியில் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அமைதி திட்டத்தின் அடுத்த கட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து […]

மீண்டும் உக்ரைன் மீது டிரோன் தாக்குதல்: ரஷ்யா

நேற்று இரவு ரஷ்யா, உக்ரைன் மீது 653 டிரோன்களையும் 51 ஏவுகணைகளையும் ஏவியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்ட போதிலும், இந்தத் தாக்குதல்கள் உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய ஏவுகணை தாக்குத்தலில் கீவ்வுக்கு வெளியே உள்ள ஃபாஸ்டிவ் (Fastiv) நகரில் ஒரு ரயில் நிலைய மையத்தில் விழுந்து வெடித்ததில் அதன் பிரதான நிலையக் கட்டிடத்தையும், ரயில் பெட்டிகளையும் (rolling stock) சேதப்படுத்தியது. மற்றும் […]

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக சிறு அளவிலான வேலை இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்த நிலையில்,கனடாவில் வேலை வாய்ப்புகள் உயர்ந்துள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை மொத்தம் 181,000 புதிய வேலைகள் உருவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் […]

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல்

லண்டன் மசூதி ஒன்றில் மர்ம நபர் அரங்கேறிய கத்தி குத்து தாக்குதல் லண்டனில் மசூதி ஒன்றில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த நபர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதால், அவர் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் Regent’s Park அருகில் இருக்கும் Central மசூதியில் இன்று பிற்பகல் பிரார்த்தனை நடைபெற்றது. சரியாக உள்ளூர் நேரப்படி 3.00 மணியளவில் நடந்த பிரார்த்தனையின் போது, திடீரென்று அங்கிருந்த மதத்தலைவர் […]

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்!

டிரம்பின் வருகைக்காக தயாராகும் அகமாதாபாத் நகரம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பெப்ரவரி 24ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வருகைத்தர உள்ளார். அதிபரான பிறகு டிரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சில கையெழுத்தாக உள்ளன. அகமாதாபாத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் டெல்லி செல்ல உள்ளார். இதேவேளை, டிரம்பின் வருகைக்காக அகமாதாபாத் நகரம் தயாராகி வருகிறது. இதோடு பாதுகாப்பு […]

பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்

சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ்

சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் ஜப்பானில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் பயணித்த பிரித்தானியா தம்பதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் கடந்த 48 மணி நேரத்தில் 169 பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், பிரித்தானியா தம்பதிகளான டேவிட் ஆபெல் மற்றும் அவரது மனைவி சாலி ஆகியோரும் அடங்குவர். இதன் மூலம் குறித்த […]

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்!

பிரான்சில் உயிரழந்த பின்னும் எட்டுப்பேரைக் காப்பாற்றிய யாழ் இளைஞன்! யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார். முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேருக்கு அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. சில தினங்களின் முன்னர் அவர் […]