தமிழ்நாடு செய்திகள்

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்

நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் […]

இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்

ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட ‘அ.தி.மு.க., அம்மா’ சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் […]

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

  இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் புதிய சின்னங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சசிகலா தரப்புக்குத் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக சசிகலா தரப்புக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இது வேண்டாம் என சசிகலா அணி தெரிவித்தால் தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியின் […]

இடைத்தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் விவகாரம் ; தேர்தல் அதிகாரியிடம் 31 பேர் நேரில் மனு

ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா அணியின் டிடிவி […]

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை

அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, தண்டையார்பேட்டை திமுக தேர்தல் பணிமனையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய […]

100 தாமரை மொட்டுகளே...: தமிழிசை நம்பிக்கை

100 தாமரை மொட்டுகளே…: தமிழிசை நம்பிக்கை

100 தாமரை மொட்டுகளே…: தமிழிசை நம்பிக்கை தற்போது வெற்றி பெறும் கங்கையால், தமிழகத்தில் 100 தாமரைகள் மலரும் என பா.ஜ.க, தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இவர் பா.ஜ.க, தலைவர் தமிழிசையுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழிசை கூறியதாவது: தொகுதியில் பணப்பட்டுவாடா : தற்போது வெற்றி பெறும் கங்கையால் தமிழகத்தில் 100 […]

ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி ஓ.பி.எஸ்.,சை மீண்டும் தமிழக முதல்வராக்குவோம் என ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் கூறினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மதுசூதனன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில்தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். மதுசூதனனுடன், நத்தம் விஸ்வநாதன், செம்மலை மா.பா., கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் உடன் சென்றனர். குடும்ப ஆட்சி: பின்னர் மதுசூதனன் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., ஆசி […]

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனு

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி

ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா வேட்புமனுவை வைத்து அஞ்சலி ஆர்.கே.நகரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள தீபா, மெரினாவில் ஜெயலலிதா சமாதியின் மேல் வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்நிலையில்ஆர்.கே.நகரில்’ பேரவை சார்பில் போட்டியிடும் தீபா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர். சசிகலா அணி வேட்பாளராக […]

​சபாநாயகர் மீது தி.மு.க

​சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

​சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தகோரி அன்றைய தினம் திமுக சட்டமன்ற […]

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உறவினர்கள் கோரிக்கை இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, எட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கைது […]