ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை’ என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. […]
தமிழ்நாடு செய்திகள்
மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.
ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. […]
சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும் – தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்: சட்டசபையில் எண்ணிக்கையில் திமுக முதலிடம் பெறுகின்ற காலம் விரைவில் வரும். எதிர்கட்சி வரிசையில் இருந்தலும் சட்டசபையில் மக்கள் நலனுக்காக செயல்படுவோம். சட்டசபை போல் மக்கள் மன்றத்திலும் செயல்படுவோம். சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு மாதம் பட்ஜெட் தொடர் நடத்தப்பட வேண்டிய நிலையில், ஒரு […]
தக்கலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் – தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு
தக்கலை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்ததுடன், தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், பத்மனாபபுரம் கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், தக்கலை அருகே புலியூர்குறிச்சி என்னும் இடத்தில் 24.3.2017 அன்று ஸ்ரீ அய்யப்பா […]
அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் பேசிவரும் மு.க.ஸ்டாலின் – தினகரன் குற்றசாட்டு
அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க எங்கள் எம்.எல்.ஏக்களிடம் நண்பர்கள் மூலம் மு.க.ஸ்டாலின் பேசிவருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். சென்னை ராயப்பேட்டையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்பேன். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.ஆர்.கே நகரில் யார் பணம் கொடுக்கிறார்கள் என மக்களிடம் கேட்டுபாருங்கள். தமிழகத்தில் அ.தி.மு.கவை ஒழித்து விட வேண்டும் என சில செயல்படுகிறார்கள். ஆட்சியை […]
சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக கரண் சின்ஹா பொறுப்பேற்றார்
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமிஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் கரண் சின்ஹா கமிஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் வாழ்த்து கூறினார்கள். அதன் பின்னர் உடனடியாக கரண் சின்ஹா […]
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள்
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து – எனது முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் – ரஜினிகாந்த் வேண்டுகோள் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ள ரஜினிகாந்த், நான் ஒரு கலைஞன், என் முடிவுகளை அரசியலாக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு வழங்க இருந்தார். இந்நிலையில், அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் […]
ஆர்.கே. நகர்; வேட்பாளர்களின் சொத்து விபரம்
ஆர்.கே. நகரில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் நடைபெற உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம், 114 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள், இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. தேர்தலில் போட்டியிட ‘அ.தி.மு.க., அம்மா’ சார்பில் சசி அக்காள் மகன் தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க., சார்பில் மருத கணேஷ், பா.ஜ., சார்பில் […]
சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் புதிய சின்னங்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சசிகலா தரப்புக்குத் தொப்பி சின்னத்தையும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக சசிகலா தரப்புக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. இது வேண்டாம் என சசிகலா அணி தெரிவித்தால் தொப்பி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓபிஎஸ் அணியின் […]
ஆர்.கே.நகர் விவகாரம் ; தேர்தல் அதிகாரியிடம் 31 பேர் நேரில் மனு
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா அணியின் டிடிவி […]





