அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், 316 மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்படுள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் […]
தமிழ்நாடு செய்திகள்
நவம்பர் 7-ந்தேதி கட்சி அறிவிப்பு இல்லை
கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என வார இதழ் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நவம்பர் 7-ந்தேதி கட்சி […]
பேனர் தடையை நீக்க சென்னை மாநகராட்சி மேல்முறையீடு
உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தடையால் பிரிண்டிங் பிரஸ் தொழில் பாதிப்பு அடையும் என்றும் கருத்து கூறப்பட்டது இந்த நிலையில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த […]
மருத்துவமனையில் நடராஜன் ; வெளியான புகைப்படம்
புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை […]
நமது இயக்கத்தில் இணையுங்கள்
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். […]
தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி ராக்கி என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார்.தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி […]
தமிழக ஆளுனருடன் எச்.ராஜா திடீர் சந்திப்பு
சமீபத்தில் தமிழக ஆளுனராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் சமீபத்தில் ‘மெர்சல் படத்தால் சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள், அதன் பின்னர் நடந்த வருமான வரி சோதனை குறித்து எச்.ராஜா, ஆளுனருடன் பேசியிருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு பின்னர் ஏற்படும் நிகழ்வுகளை […]
நவீனமயமாகும் ராணுவ மையங்கள்…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் ராணுவ மையங்களை, நவீனப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 58 ராணுவ மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து மையங்களும் நவீனப்படுத்தப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி டெல்லியில் தொடங்கிய ராணுவ மாநாட்டில், விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மாநிலங்களுடன் தகவல் பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், ராணுவத்தின் உள்கட்டுமானத்தை ஊக்கப்படுத்தவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரிகள் […]
விஜயுடன் மெர்சல் படத்தை பார்த்த கமல்..!
மெர்சல் திரைப்படம் குறித்த சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனை, நடிகர் விஜய் சந்தித்துள்ளார். விஜய் மற்றும் படக்குழுவினருடன் ‘மெர்சல்’ திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பான புகைப்படங்களை மெர்சல் படத்தின் இயக்குநர் அட்லி, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கமல்ஹாசன் மெர்சல் திரைப்படத்தைப் பார்க்கும்போது, உடன் இருந்தது வாழ்வின் முக்கிய தருணம் என குறிப்பிட்டுள்ளார். மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களையும் தவறான தகவல்களையும் […]
ரஜினி மெர்சலுக்காக பேசமாட்டார்; போர் வரும்போதுதான் பேசுவார் – சீமான்
மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர், கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர […]





