தமிழ்நாடு செய்திகள்

3 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

கடந்தவாரம் தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளை தாக்கிய ஒகி புயல் தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி திரும்பி உள்ளது. அந்த புயல் வலுவிழந்து நள்ளிரவிலோ அல்லது இன்று(புதன்கிழமை) காலையிலோ சூரத் அருகே கரையை கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஒகி புயல் குஜராத்தை தாக்கும் என்பதால் குஜராத், மராட்டிய மாநில மீனவர்கள் 6-ந்தேதி(இன்று) முதல் 8-ந்தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் […]

விஷால் கேட்கும் சின்னம் கிடைக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று காலை சிவாஜி சிலை, காமராஜர் சிலை மற்றும் ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகம், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகிய இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த 100 பேருடன் இன்று மதியம் 2 […]

சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறை செல்ல விலக்கு

சொகுசு கார் இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைச் செல்ல தற்காலிமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த […]

கமல், ரஜினியை நம்பி பிரயோஜனமில்லை: விஷால் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலை கமல் தான் பின்னிருந்து இயக்குகிறார் என்று கூறப்படும் நிலையில் உண்மையில் இந்த முடிவை விஷால் தனித்தே எடுத்ததாக கூறப்படுகிறது. கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக பாவ்லா காட்டி கொண்டிருந்தாலும் அவருக்கு உண்மையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. விஸ்வரூபம் 2, சபாஷ்நாயுடு, ஆகிய படங்களை முடிக்கவே அவருக்கு இன்னும் ஆறு மாதங்கள் தேவைப்படும். அதன் பின்னர் ‘இந்தியன் 2’ படத்தில் […]

விஷாலுக்கு ஓட்டு போடுங்க: சுசீந்திரன் ஆதரவு

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட போவதாகவும், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் விஷாலின் இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டே உள்ளது. விஷாலுக்கு இயக்குனர் அமீர் மற்றும் சேரன் உள்பட ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலான திரையுலகினர் அவருடைய அரசியல் முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரன், ‘விஷால் உண்மையானவர் என்றும், அவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்றும் […]

விஷால் போட்டியிடுவதால் என்ன நடக்கும்? திருமாவளவன் கருத்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திடீரென விஷால் களமிறங்கியுள்ளதால் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் பரபரப்பு அடைந்துள்ளன. நேற்று விஷால் போட்டியிடுவதாக அறிவித்த ஒருசில நிமிடங்களில் அதிமுக அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர், தமிழருவி மணியன், நாஞ்சில் சம்பத் உள்பட பலர் கருத்து கூறிய நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிடுவதால் வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும், வெற்றி […]

ஆர்.கே.நகரில் அமீர் போட்டியா? சீமான் விளக்கம்

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டதும் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான கலைக்கோட்டுதயம் மாற்றப்படுவார் என தெரிகிறது. விஷால் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிந்து டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், தினகரனுக்கு மறைமுக ஆதரவு கொடுக்கவே விஷால் போட்டியிடுவதாகவும் இயக்குனர் அமீர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தான் […]

விஷால் போட்டி குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்

ரஜினி, கமல், விஜய் போல் அரசியலுக்கு வரப்போவதாக கூறிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணறிக்கொண்டிராமல் வெற்றியோ, தோல்வியோ களமிறங்க முடிவு செய்துவிட்ட விஷாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் விஷாலின் திடீர் அரசியல் பிரவேசம் குறித்து பிரபலங்கள் கூறியதை பார்ப்போம் இயக்குனர் அமீர்: சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்பதை பார்க்க வேண்டும். மேலும் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில், நடிகர் விஷால் போட்டியிட காரணம் என்ன? […]

திருவண்ணாமலை 2,668 அடி உயர மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழ்வது இந்த திருத்தலம் திருவண்ணாமலை. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர். இதையடுத்து, 200 […]

தொப்பி இல்லை என்றால் வேறு எந்த சின்னம்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ, வேறு சுயேட்சை வேட்பாளர் தொப்பி சின்னத்தை கேட்காவிட்டால் தினகரனுக்கு அந்த சின்னத்தை வழங்குவதில் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டது. ஆனால் அது நடப்பது சாத்தியம் இல்லை இந்த நிலையில் ஒருவேளை தொப்பி சின்னம் தனக்கு கிடைக்காவிட்டால் கிரிக்கெட் மட்டை அல்லது விசில் […]