போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பொதுமக்கள் பேருந்துகள் இன்றி பயணத்திற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இதனையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு […]
தமிழ்நாடு செய்திகள்
பின்வாங்கிய ரஜினி ரசிகர்கள்!
மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க இருந்த ரஜினி ரசிகர்கள், பீட்ட ரஜினிக்கு எழுதிய மிரட்டல் தொனியிலான கடிதத்துக்கு பின்னர், அந்த முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளனர். கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விடுபட்ட தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், மதுரை ரசிகர்கள் மத்தியில் பேசும்போது உங்களுக்கு கறி சோறு போட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் […]
அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன்
தமிழக சட்டப்பேரவை அவை முன்னவராக இருந்த அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு, அந்த பொறுப்பு மீண்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வசம் கொடுக்கப்பட்டது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பதவிகள், பொறுப்புகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுவதால் செங்கோட்டையனும் அப்செட்டில், அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் துரோகிகள் என விமர்சித்த தினகரன் செங்கோட்டையனுக்கு […]
ரஜினிகாந்த் ஒரு 420: சீண்டும் சுவாமி!
நடிகர் ரஜினிகாந்த தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் வழக்கத்தைவிட வேகமாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை சீண்டியுள்ளார். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆரம்பம் முதலே நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து வருகிறார். பலமுறை ரஜினியை மிகவும் கடினமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சுப்பிரமணியன் சுவாமி ரசிக்கவுமில்லை, விரும்பவுமில்லை. இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேச […]
ரஜினிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் !
அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக ரஜினி கூறியுள்ளார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்து பேசினார். மேலும், திரைத்துறையிலும் அவருக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. அவருக்கு பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி […]
அரசியல் கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றார் ரஜினிகாந்த்
நேற்று இரவு 7.53 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த், கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லத்துக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த் வேகமாக வீட்டுக்கு உள்ளே சென்றார். கருணாநிதியை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்ட அவர், பழைய கால நினைவுகளை கருணாநிதியிடம் நினைவுகூர்ந்தார். அதை சிரித்துக்கொண்டே கருணாநிதி கேட்டார். மேலும், தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் கருணாநிதியிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு சுமார் 20 […]
தமிழக அரசியலுக்கு ஆன்மிகம் மட்டும் போதாது- மலேசியா துணை முதல்வர்
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் மூலம், தமிழகத்து அரசியலை ஆட்கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது பெயரில் உள்ள முகநூல் பக்கத்தில் விரிவான, விமர்சன அறிக்கை ஒன்றை ராமசாமி வெளியிட்டுள்ளார். அதில், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவர் கடுமையாக சாடியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- இரண்டு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்டது, விரைவில் நனவாகவுள்ளது. கடந்த 31 டிசம்பர் 2017 […]
ரஜினியை எதிர்க்கும் திருமாவளவனின் திடீர் பல்டி ஏன்?
கடந்த சில மாதங்களாக ரஜினியும் கமலும் அரசியலுகு வரவுள்ளதாக கூறிக்கொண்டிருந்த நிலையில் இருவரையும் முதன்முதலில் ஆதரித்த முதல் அரசியல் தலைவர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவள்வன் தான்; ஆனால் கடந்த 31ஆம் தேதி ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தவுடன் திடீரென அவரை எதிர்க்கும் முதல் தலைவராகவும் அவர் உள்ளார். முரண்பாட்டின் மொத்த உருவமாக திருமாவளவன் இவ்வாறு நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு […]
யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது
நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் சந்தித்தார். ரஜினியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேட்டியளித்ததாவது, திமுக தலைவர் கருணாநிதி என்னுடைய நண்பர். அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவரது உடல் நிலை குறித்து விசாரித்தேன். மேலும், எனது அரசியல் பிரவேசத்தை குறித்து அவரிடம் தெரிவித்து ஆசி பெற்றேன் என […]
தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் வெடிக்க இருக்கும் டைம்பாம்
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்கே நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் அபார வெற்றிபெற்றார். அவரது வெற்றிக்கு பின்னர் அரசியல் களத்தில் தினகரன் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். தினகரனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மதுசூதனன் அதிக வாக்குகள் பின்தங்கி தோல்வியை தழுவினார். இருப்பினும் அவருக்கு மட்டுமே டெப்பாசிட் தொகை கிடைத்தது. திமுக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட்டை இழந்தினர். தேசிய கட்சியான பாஜக நோட்டாவை […]





