தமிழ்நாடு செய்திகள்

மேடையில் ரஜினியை தாக்கிய கமல்- என்ன சொன்னார் தெரியுமா!

மலேசியாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது நட்சத்திர கலை நிகழ்ச்சி. இதில் ரஜினி, கமல், சூர்யா என பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி, கமல் இருவரும் தங்கள் மனதில் தோன்றிய கருத்துக்களை பேசினர். மேலும், அரசியல் குறித்தும் மறைமுகமாக பேச, இதில் கமல் ஒரு படி மேலே சென்று ரஜினியை தாக்கியே பேசினார். கமல் பேசுகையில் ‘என்னை பேச வைத்து கொண்டிருக்கும், குரல் எல்லாம் மக்களின் குரல் தான். […]

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார்

சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார் என்று நமல் ராஜபக்சே கூறியிள்ளார். ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சுய அரசியல் லாபத்துக்காக மட்டுமே இலங்கை தமிழர் விவகாரத்தை சீமான் பயன்படுத்துகிறார். இலங்கை தமிழர்கள் மீது சீமானுக்கு உண்மையில் அக்கறையில்லை. தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் சீமான் எழுப்பிய கேள்விக்கு நமல் ராஜபக்சே டுவிட்டரில் பதில் அளித்துள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமம்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தற்கொலைக்கு சமமானது என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதும் தொடரில் ஆர்.கே.நகர் குறித்து விமர்சித்தது பெரும் பரபப்பை ஏற்படுத்தியது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். […]

சட்டப்பேரவை லைவ்க்கு அஞ்சுகிறதா ஆளும் அரசு?

நாளை சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என சட்டப்பஞ்சாயத்து இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிரது, அதே போல ஆந்திராவில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கர்நாடகாவில் தனியார் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. எமவே, தமிழக சட்டசபை நிகழ்வுகளும் ஒளிபரப்ப படவெண்டும் என கோரிக்கை 2012 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. ஆனால், […]

ரஜினி ஆதாரவாளர்கள் என யாரும் இல்லை

தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தனிநபர் யாரையும் ரஜினி ரசிகர் என்று குறிப்பிட வேண்டாம் என்று ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கோரிக்கை விடுத்துள்ளார். ரஜினிகாந்த தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் ரஜினி அரசியல் குறித்து பல விவாதங்கள் நடைபெற்றது. இதில் ரஜினி […]

தமிழகத்தில் தடையின்றி 66% பேருந்துகள் இயக்கம்.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்த ஆலோசனை இன்று நடைபெற்றது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் நியமிகப்பட்டு அரசு பேருந்துகளை […]

அதிமுக இருக்கும் போது எதற்கு தனிக்கட்சி?

தனிக்கட்சி தொடங்கும் திட்டமில்லை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதன் தொடர்ச்சியாக, 100க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களை நிர்வாகிகள் பதவிகளிலிருந்து எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நீக்கியது. எனவே, அவர்களுக்கு பதவி கொடுக்கும் வகையில், டிடிவி தினகரன் பேரவை அல்லது தனிக்கட்சி […]

இன்று, நாளை மின்சார ரயில்கள் ரத்து

போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது சென்னை மின்சார ரயில்கள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படமால் உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே சென்னையில் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக […]

அரங்கத்தையே அதிர வைத்த அந்த வார்த்தை!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பிற்கு பின்னர் ஊடகங்களில் ரஜினி குறித்தான செய்திகள் அதிகம் இடம்பெறுகின்றன. இந்நிலையில் அவர் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தை அதிர வைத்தது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரை நட்சத்திரங்கள் இணைந்து நடத்தும் நட்சத்திர விழாவில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ளார். மலேசிய சென்றுள்ள அவர் நடிகர்கள் விளையாட உள்ள நட்சத்திர கிரிக்கெட்டையும் கண்டுகளிக்க உள்ளார். இந்நிலையில் மேடை ஏறிய நடிகர் ரஜினியிடம் கிரிக்கெட் தொடர்பான பல கேள்விகளை […]

ரஜினியை பளார் பளார் என விளாசிய பிரேமலதா

கடலூரில் நேற்று தேமுதிக சார்பில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிய விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினியை கடுமையாக விளாசி பேசினார். முற்றுகை போராட்டத்தின் போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், யாரெல்லாமோ இன்றைக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இதுவரை தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வாருங்கள். அதுபற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் […]