இறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களை அவர்களது வழக்கிற்கு ஏற்ப விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளில் ஒன்று சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்வது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்ற உள்ளது. சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் […]
தமிழ்நாடு செய்திகள்
ரூ. 19,592.58 கோடி பெற்று ஜி.எஸ்.டி வசூலில் இரண்டாவது இடம் பிடித்த தமிழகம்
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) கட்டுவதில் தமிழகம் இராண்டாவது இடம் பிடித்திருப்பதாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு ஒரே நாடு ஒரே வரி என்பதை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தியது. ஜிஎஸ்டி திட்டத்தை பலர் எதிர்த்து வந்தாலும் இது ஒரு சட்டமாக அமல்படுத்தப்பட்டுவிட்டதால் அனைவரும் ஜிஎஸ்டி வரியை செலுத்தி வருகின்றனர். இந்த ஜி.எஸ்.டி, வரியில் 50 சதவீதம் […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வலது கண்ணில் புரை இருந்ததால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், முதல்வர் பழனிசாமிக்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது கண்ணில் புரை அகற்றப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இன்னும் 4 நாட்கள் […]
போதையில் இளம் பெண்களுடன் ஆட்டம் போட்ட பாரதிராஜா
தமிழ் சினிமாவுல தண்ணி அடிக்காத மனுஷன பாக்கவே முடியாது போல. எல்லா விஷயங்களுக்கும் வியாக்கனம் பேசும் இயக்குனர் பாரதிராஜா செம குத்தாட்டம் ஒன்னு போட்ருக்காரு. அதாங்க செமய்யா சரக்கு அடிச்சிட்டு பொண்ணுங்க கூட குத்தாட்டம் போட்ருக்காரு. அந்த வீடியோ எப்படியோ நெட்ல வர, நம்ம பசங்க சும்மா விடுவாங்களா. தாறுமாறா டிரண்ட் ஆகிடுச்சு.
பணம் வாங்காமல் தேர்தல் நடத்தினால் தமிழ்நாட்டில் பாஜக ஜெயிக்கும்
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்காது என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழிகள் இருப்பதாகக் கூறினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் கேட்டுக்கொண்டால் மாற்று வழி குறித்து தான் தெரிவிப்பேன் என்றும் சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டார். 2ஜி வழக்கில் […]
அதிமுகவிலிருந்து 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கம்!
கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் குறிக்கோள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வினோத் குமார், மாவட்ட […]
ரஜினி, கமலை அடுத்து விஜய்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பான ஆரம்பகட்ட அரசியல் பணியை செய்து வருகிறார் அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனும் வரும் 21ஆம் தேதி ‘நாளை நமதே’ என்ற கோஷத்துடன் புதிய கட்சியை ராமநாதபுரத்தில் அறிவிக்கவுள்ளார் இந்த நிலையில் இளையதளபதி விஜய்யும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக புதிய அதிகாரபூர்வ […]
2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
2ஜி அலைக்கற்று வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக பாஜக மூத்த அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறி நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து […]
விஜய்யும் அரசியலில் கால் வைக்க போகிறார்-விஜய்யின் தந்தை
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய்யிக்கும் மிக பெரிய இடம் உண்டு. இவர் கடைசியாக நடித்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து இப்போதும் திரையில் கலக்கி வருகிறது. அந்த படத்தை தொடர்ந்து, இவர் அடுத்து எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு அனைத்து நாடுகளிலும் ரசிகர்கள் உண்டு. இவரது ரசிகர்கள் மக்கள் பலருக்கு பல வகையில் உதவி செய்து வருகிறார்கள். […]
எங்களையும் அழைத்து செல்லுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வரை சந்திக்க செல்லும்போது எதிர்க்கட்சி தலைவர்களையும், விவசாயிகளையும் முதல்வர் அழைத்து செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு நடத்திய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது […]





