தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் கமல்ஹாசனின் முதல் பொதுக்கூட்டம்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதனையடுத்து ஆன்லைன் மூலம் அவரது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் கட்சியில் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி திருச்சியில் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று கமல்ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார். ஆனால் […]

இது திட்டமிட்ட என்கவுண்டர்

நேற்று மதுரையில் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இந்த என்கவுண்டர் ஒரு திட்டமிடப்பட்ட சம்பவம் என முத்து இருளாண்டியின் சகோதரி சித்திரைச்செல்வி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். முத்து இருளாண்டியின் மற்றும் சகுனி கார்த்திக் இருவரையும் போலீசார் ஆஜராக கூறியதாகவும், அதன்பேரில் இருவரையும் அழைத்த வந்த நிலையில் திடீரென துப்பாக்கியால் சுட்டு போலீசார் கொன்றுவிட்டதாகவும் சகோதரி சித்திரைச்செல்வி அந்த […]

ஸ்ரீதேவியும் நானும் அண்ணன்-தங்கை போல்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொள்கை என்பது வேறு, திட்டம் என்பது வேறு; திட்டத்தின் பட்டியலே கொள்கை என நினைக்கிறார்கள். கிராம மேம்பாடு என்பதே எங்கள் கொள்கை; அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம். கிராம மேம்பாட்டை போல் விவசாய மேம்பாடு என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்களை வைத்துள்ளோம். மக்கள் நலம், தமிழகத்தின் வளம்தான் கொள்கை என […]

ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

உடல் நலக்குறைவால் மரணமடைந்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயேந்திரர்(82) கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து சங்கரமடம் திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வந்தார். அந்நிலையில் நேற்று காலை ஜெயேந்திரருக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் […]

கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல் நல்லமுறையில் தேறி வருவதாகவும், அவர் இன்னும் சில நாட்களில் பேசிவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர் இந்த நிலையில் கருணாநிதி தனது பேரனின் மகனுடன் அதாவது மு.க.தமிழரசனின் பேரனும், நடிகர் அருள்நிதியின் 2 வயது மகனுமான மகிழனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. கருணாநிதி […]

நீதிக்கு நீதி வேண்டும் என்று மத்திய அமைச்சரை கேட்கும் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இயலாது என கூறிய மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நீதிக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம் ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட […]

சசிகலா முதல்வராவதை

இதிமுக-வாக மாறிய லதிமுக

லதிமுக என்கிற தனது கட்சி பெயரை இதிமுக என பெயர் மாற்றம் செய்துள்ளார் டி.ராஜேந்தர். நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்திர், தமிழக மக்களை காக்க நாளை முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன் எனக் கூறியிருந்தார். அதன்படி, இன்று 11 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார். அந்த பெயர் பலகையில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் […]

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு மும்பையில் இன்று இறுதிச்சடங்கு

துபாயில் மரணடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் அனில் அம்பானியின், தனி விமானம் மூலம் மும்பை வந்தது. மும்பை விமான நிலையத்திலிருந்து, அந்தேரியில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீதேவி உடல் கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் விஐபிக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக ஸ்ரீதேவியின் உடல், மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இன்று காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை வைக்கப்படவுள்ளதாகவும், பின்னர் பிற்பகல் […]

சசிகலா முதல்வராவதை

மக்களை காக்க களம் இறங்கும் டி.ஆர்

தமிழக மக்களை காக்க நாளை அதிரடி முடிவு எடுக்கப் போவதாக நடிகரும், லட்சிய திமுக நிறுவனருமான டி.ராஜேந்தர் இன்று தெரிவித்துள்ளார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் தீவிர அரசியலில் இறங்குவதற்கான பணிகளில் இறங்கிவிட்டனர். அதுபோல் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்று ஒருபுறம் விஷாலும் அரசியலில் காலடி எடுத்து வைத்துவிட்டார். அதேபோல், தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என எல்லோரும் ஒன்றாக இணையும் தருணத்தில் நான் அரசியலுக்கு வருவேன் எனவும், நடிகர்கள் அரசியலுக்கு […]

கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு

நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் உள்ள லோகோ ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லோகோவை போலிருக்கிறது என்ற கருத்து வெளியாகிய நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் […]