தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் பேசும் பேச்சா இது? வைரல் வீடியோ

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், […]

ரஜினிகாந் எந்த கட்சியின் தலைவர்? – கமல்ஹாசன் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்தெரிவித்துள்ளார். ரஜினியும், கமல்ஹாசனும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் […]

யாரை நாய் என்று சொல்கிறார் குஷ்பு? குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்

பிரபல நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது தெரிந்ததே. அவர் தனது டுவிட்டரில் அவ்வப்போது பரபரப்பான டுவீட்டுகளை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் தனது டுவிட்டரில், ‘நாய் குரைச்சாலும் சூரியன் மறையப்போறதில்லை. புரிஞ்சுக்கிறவங்களுக்கு, சாரி, குலைக்குறவங்களுக்கு புரிஞ்சா சரி’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியிலேயே பல எதிரிகள் உள்ளனர். அவரை எப்போது கவிழ்க்கலாம் என்று […]

மத்திய அரசை பாராட்ட விரும்புகிறேன்

காவிரி விஷயத்திலும், ஜிஎஸ்டி விஷயத்திலும், இந்துத்துவா கொள்கைகள் விஷயத்திலும் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று மத்திய அரசை பாராட்ட விரும்புவதாகவும், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய அரசின் பணி பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார். மேலும் நான் சொல்லும் சில விஷயங்கள் திரித்து சொல்லப்படுவதாகவும் அவர் ஊடகங்களை குற்றஞ்சாட்டினார். மேலும் ஓகி புயல் வருகிறது என்ற செய்தி வந்தபோது அதன் வானிலை அறிக்கையை சின்னதாக பெட்டி […]

சொத்துக்குவிப்பு வழக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோரின் 68 சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்கிற நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த கர்நாடக நீதிமன்றத்தின் நீதிபதி டி குன்கா, வழக்கில் சம்பந்தப்பட்ட 128 சொத்துகளில், 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தவிட்டிருந்தார். ஆனால், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமராசாமி […]

என்னை வற்புறுத்தி காதலிக்க வைத்தார் அஸ்வினி – அழகேசன் வாக்குமூலம்

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரிக்கு வருகே மாணவி அஸ்வினி கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 2.45 மணியளவில் மீனாட்சி கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வரும் அஸ்வினி என்கிற மாணவியை, அழகேசன் என்ற வாலிபர் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்தார். அவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஸ்வினி […]

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து

இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இடர்களை கண்டு அஞ்சாமல் உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் விளங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண்களின் சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பினை உலகிற்கு […]

காவிரி விவகாரத்தை திசை திருப்பும் செயல் – கமல்ஹாசன் காட்டம்

பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச்.ராஜாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்திலும் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு கடும் கண்டங்கள் எழவே, அந்த பதிவை அவர் சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். அந்நிலையில், வேலூர் மாவட்டம்திருப்பத்தூர் […]

பொதுச் செயலாளராக டிடிவி தினகரன்

தினகரனை குறி வைக்கும் கமல்ஹாசன்

ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனின் ஊழலை அம்பலப்படுத்துமாறு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் மய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அரசியல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் அதிமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார். அந்நிலையில்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். இதனால், பொதுமக்கள் மத்தியில் அவரின் இமேஜ் உயர்ந்தது. ஆனால், ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து, தினகரன் தரப்பு […]

ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் – ஹோட்டலில் நடந்தது என்ன?

ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி நீரில் மூழ்கி மரணமடைந்தார். இந்நிலையில், துபாயில் என்ன நடந்தது என அவரின் கணவர் போனி கபூர் கூறிய விஷயங்களை திரைத்துறை வர்த்தக விமர்சகர் கோமல் நாஹ்தா தனது இணையதள ப்ளாக்கில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: துபாயில் தனது உறவினரின் திருமணம் முடிந்த பின், தனது மகள் ஜான்வி விரும்பிய சில […]