உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக நிறைவேற்றும் என்றும் வரும் 30ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி அதிமுக கட்சியினர் பாஜகவை வெளிப்படையாக எதிர்த்து வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பாஜக கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழக உரிமையை மீட்க பாஜக உறுதுணையாக இருக்கும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். மத்திய […]
தமிழ்நாடு செய்திகள்
நடராஜன் கவலைக்கிடம்
சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சு வலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே இவருக்கு உடலுறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றுள்ளது. நேற்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கணவரை காண பரோல் வேண்டி மனு ஒன்றை பிறப்பித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக இருப்பதால் […]
கட்சியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத்துக்கு சி.ஆர்.சரஸ்வதி காட்டமான பதில்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற தனி அமைப்பை டிடிவி தினகரன் தொடங்கிய நிலையில் திராவிடத்தையும் அண்ணாவையும் டிடிவி விலக்கிவிட்டதாக கூறி சற்றுமுன் நாஞ்சில் சம்பத் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு ‘அம்மா முன்னேற்ற கழகத்தின் சி.ஆர்.சரஸ்வதி பதிலளித்துள்ளார். அவர் , ‘*திராவிடத்தை டிடிவி புறக்கணித்துவிட்டார் என்று நாஞ்சில் சம்பத் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. ஜெயலலிதாவை திராவிடத் தலைவியாகவே நாங்கள் பார்க்கிறோம்’ […]
ஜெயலலிதாவாக நடிக்க ஒருவர் கிடைத்துவிட்டார்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போவதாக இயக்குநர் ரவிரத்தினம் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பல மர்மங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் வாழக்கை, அவரது மறைவு உள்ளிட்ட பல மர்மங்கள் அவரது வாழ்க்கையில் உள்ளது குக்றிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் அந்த திரைப்படத்தில் இடம்பெறுமா என்பது கேள்வியாக உள்ளது. மேலும், ஜெயலலிதா […]
கமல்-விஷால் திடீர் சந்திப்பு
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2′ திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் […]
ஆன்மிக இடமான இமயமலையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை
தனது குருவான பாபாவிடம் ஆசி பெறுவதற்காக ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, தமது இமயமலைப் பயணம் அன்றாட வாழ்க்கையைக் காட்டிலும் மாறுபட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலம் பாலம்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் யாத்ரீகனாக இமயமலை வந்துள்ளதால், அரசியல் பற்றி இங்கு பேச விரும்பவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அமைச்சர் பேசும் பேச்சா இது? வைரல் வீடியோ
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், […]
ரஜினிகாந் எந்த கட்சியின் தலைவர்? – கமல்ஹாசன் கேள்வி
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவரின் கொள்கைகளையும் விமர்சிப்பேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்தெரிவித்துள்ளார். ரஜினியும், கமல்ஹாசனும் நீண்ட வருட நண்பர்கள். எங்கும், எப்போது, ஒருவரை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. ஒருவரையொருவர் தவறாக விமர்சித்துக் கொள்வதும் இல்லை. அந்நிலையில்தான், நேற்று செய்தியார்களை சந்தித்த கமல்ஹாசனிடம், காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்க மறுக்கிறார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இதில் மட்டுமல்ல. ரஜினி பல விவகாரங்களில் […]
யாரை நாய் என்று சொல்கிறார் குஷ்பு? குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்
பிரபல நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது தெரிந்ததே. அவர் தனது டுவிட்டரில் அவ்வப்போது பரபரப்பான டுவீட்டுகளை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் தனது டுவிட்டரில், ‘நாய் குரைச்சாலும் சூரியன் மறையப்போறதில்லை. புரிஞ்சுக்கிறவங்களுக்கு, சாரி, குலைக்குறவங்களுக்கு புரிஞ்சா சரி’ என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியிலேயே பல எதிரிகள் உள்ளனர். அவரை எப்போது கவிழ்க்கலாம் என்று […]
மத்திய அரசை பாராட்ட விரும்புகிறேன்
காவிரி விஷயத்திலும், ஜிஎஸ்டி விஷயத்திலும், இந்துத்துவா கொள்கைகள் விஷயத்திலும் மத்திய அரசை விமர்சனம் செய்து வந்த நடிகர் கமல்ஹாசன் இன்று மத்திய அரசை பாராட்ட விரும்புவதாகவும், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய அரசின் பணி பாராட்டத்தக்கது என்றும் கூறியுள்ளார். மேலும் நான் சொல்லும் சில விஷயங்கள் திரித்து சொல்லப்படுவதாகவும் அவர் ஊடகங்களை குற்றஞ்சாட்டினார். மேலும் ஓகி புயல் வருகிறது என்ற செய்தி வந்தபோது அதன் வானிலை அறிக்கையை சின்னதாக பெட்டி […]





