தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்கக் கூடாது என தினகரனிடம் சசிகலா கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். இன்னும் சில சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. அவற்றை சசிகலாவின் தம்பி திவாகரன் கவனித்துக்கொள்கிறார். மற்றபடி ஆறுதல் கூற வரும் உறவினர்களை சசிகலாவே நேரில் சந்தித்து பேசுகிறாராம். சமீபத்தில்தான் தினகரன் தனது […]
தமிழ்நாடு செய்திகள்
எல்லாம் ஏமாற்று வேலை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் போராடுவது ஏமாற்று வேலை என ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக எம்.பிக்கள் கடந்த சில நாட்களாகவே பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவுரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் “அதிமுக எம்.பி.க்கள் செய்வது ஏமாற்று வேலை. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு […]
தினகரன் பாஜகவை எதிர்க்கவில்லை – போட்டு உடைத்த நாஞ்சில் சம்பத்
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் பாஜகவை எதிர்த்து பேசி நான் பார்ததே இல்லை என அவரிடமிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவின் தலைமையாக சசிகலாவை ஏற்க மாட்டேன் என பரபரப்பு கிளப்பிய நாஞ்சில் சம்பத், அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவுடன் இணைந்து கொண்டார். சசிகலா சிறைக்கு சென்ற பின் தினகரனின் தீவிர ஆதரவாளராக சம்பத் மாறினார். அந்நிலையில், சமீபத்தில் தினகரன் தனது அணிக்கு […]
ஜெயலலிதா சிகிச்சை ; சிசிடிவி நிறுத்தப்பட்டது – அப்போலோ பிரதாப் ரெட்டி தகவல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என அப்போலோ நிறுவன தலைவர் பிரதார் ரெட்டி தெரிவித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. […]
மறைந்த கணவரை காண தஞ்சை வந்தடைந்தார் சசிகலா..
மறைந்த தனது கணவர் நடராஜனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு பரோல் கிடைத்த சசிகலா சிறையிலிருந்து புறப்பட்டு தற்போது தஞ்சைக்கு வந்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. அதை சிறை நிர்வாகம் ஏற்று அவருக்கு 15 நாள் பரோல் வழங்கியது. இதையடுத்து, மதியம் சிறையில் இருந்து […]
அப்பாடா தலைவர் வாயை திறந்துவிட்டாரா! ரஜினி இப்போவது பேசினாரே
சில நாட்களுக்கு முன் இமயமலை சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சென்னை திரும்பிவிட்டார். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அவரது போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இமயமலை பயணம் புத்துணர்வு அளிக்கிறது. இனி 16 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வது நடக்கும். புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டு மிராண்டத்தனமானது. ரதயாத்திரையின் போது மத கலவரத்திற்கு […]
சசிகலாவுக்கு பரோல்
சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் தனது கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 15 நாட்கள் பரோல் வேண்டும் என்று சசிகலாவின் தரப்பில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, நடராஜனின் இறப்பு சான்றிதழ் பெற்றவுடன் சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, சசிகலாவுக்கு 15 நாள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு சிறை நிர்வாகம். இதனையடுத்து இன்னும் சில […]
நடராஜன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்
சசிகலாவின் கணவரும் பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகருமான நடராஜன் இன்று அதிகாலை உடல்நலக்கோளாறால் காலமானார். அவருக்கு வயது 74. நடராஜனின் மறைவுக்கு பிரபல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருமாவளவன்: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழ விடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா: நடராஜனின் மறைவு மொழி, இன உரிமை, ஈழவிடுதலை அரசியல் களத்திற்கு பேரிழப்பு: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா: […]
நடராஜன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
பிரபல பத்திரிகையாளரும், அரசியல் ஆலோசகரும் சசிகலா கணவருமான நடராஜன் இன்று காலை மரணம் அடைந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனார். இந்த வகையில் சற்றுமுன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் துரைமுருகன், பொன்முடி , எ.வ.வேலு உள்ளிட்ட திமுக பிரமுகர்களும் உடனிருந்தனர். நடராஜன் மறைவு குறித்து ஸ்டாலின் கூறியபோது, ‘நடராஜனின் மறைவு […]
சொத்துக்காக பெற்ற தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகன்
புதுக்கோட்டை அருகே சொத்துத் தகராறில் பெற்ற தாயின் தலையை அவரது மகனே வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மறவன்பட்டியைச் சேர்ந்தவர் ராணி(54). இவரது மகன் ஆனந்த்(30). சொத்து தொடர்பாக ராணிக்கும், ஆனந்துக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இன்று காலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், தனது தாய் என்றும் பாராமல் ராணியின் தலையை துண்டித்து காவல் […]





