முக்கிய செய்திகள்

Head News

மதுபோதையில் வாகனம் செலுத்திய 527 பேர் கைது!

மேல் மாகாணத்தில் பொலிஸார் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 527 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது களியாட்ட நிகழ்வுகளுக்கு சென்றவர்கள் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்துவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பல சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்களும் உள்டங்குகின்னர். இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை அடுத்த வரும் சில தினங்களில் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமைக் காரியாலயம் […]

24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் கைது

24 கிலோ கேரள கஞ்சாவுடன் 5 பேர் களுத்துறை சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (10) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுக்கம் மற்றும் தர்கா டவுன் பகுதிகளை சேர்ந்த 23, 32, 35, 38 மற்றும் 47 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் […]

வியாழனன்று சு.த.கட்சியினரை சந்திக்கிறார் மஹிந்த

மக்கள் விடுதலை முன்னணியினருடானா சந்திப்பினையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை எதிர்வரும் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்தசந்திப்பில் பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் ரோஹன லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 11.03.2019

மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில்  வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள். ரிஷபம்: கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் புதிய வர்களை […]

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியில் இணைந்த பிரபல நடிகை!

நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியலில் இறங்கிவிட்டார். இளைஞர்கள், இளம் பெண்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரும் இவர்களை சந்தித்து பேசி வருகிறார். தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அவர் சுற்று பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். அண்மைகாலமாக ஆளுங்கட்சி மீதும் எதிர்கட்சி மீது தன் எதிர்ப்புகளை வெளிப்படையாக பேசிவந்தார். அவருக்கான ஆதரவுகள் பெருகி வரும் வேளையில் பிரபல காமெடி நடிகை கோவை சரளா தன்னை கமல்ஹாசன் முன்னிலையில் […]

மைத்திரி மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையுடன் இணைந்து செயற்பட்டது தவறென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பொதுஜன பெரமுனவினரின் ஏற்பாட்டில் கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமற்றவர்களுடன் கூட்டணியமைத்தமையின் விளைவினை மிக தாமதித்தே உணர்ந்துள்ளார். இதன் விளைவாகவே […]

இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை

இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிய இலங்கைக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் எதிர்வரும் 20ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின், இலங்கை தொடர்பான அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, […]

அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் மைத்திரி!

பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாகாண ஆளுநர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.இதன்போதே ஜனாதிபதி கடும் தொனியில் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, போதைப்பொருட்களிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ‘சுஜாத தருவோ’ எனப்படும் ‘கண்ணியமான […]

Gotabaya Rajapaksa

நாட்டின் பிரதமராக தமிழரே இருக்க வேண்டும்! கோத்தா அதிரடி அறிவிப்பு

தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,தமிழ் மக்களுக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று தமிழ் கட்சிகளுக்கு தெரியாதுள்ளது.தமிழ் கட்சிகள் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்களுக்கு அந்தத் தேவையில்லை.பொருளாதார சமநிலையும் நாட்டின் அனைத்து துறையிலும் அபிவிருத்தியும் இருந்தால் […]