முக்கிய செய்திகள்

Head News

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான பணிகள் அனைத்தும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். இதனிடையே, கடந்த டிசம்பர் மாதம் நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 661 மத்திய நிலையங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 18.03.2019

மேஷம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். நட்பு வட்டம் விரியும். எதிர்பாராத இடத்தி லிருந்து உதவிகள் கிடைக் கும். வெளியூர் பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். உறவினர்கள் […]

ரஜினிகாந்த்

உச்சக்கட்ட கோபத்தில் ரஜினி ரசிகர்கள் ?

ரஜினி தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் நம்பர் 1 இடத்தில் தான் இருக்கின்றார். இவர் நடிப்பில் வந்த எந்திரன், கபாலி வசூலை இன்னும் எந்த ஒரு படமும் முறியடிக்காத நிலையில் 2.0 வசூல் எங்கோ இருக்கின்றது. இனி எந்த ஒரு நடிகரும் அந்த வசூலை தொடுவார்களா? என்பது சந்தேகம், அந்த வகையில் ரஜினிகாந்த் அதிவிரைவில் அரசியலில் களம் காணவுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் நேற்று ரஜினியின் அடைமொழியை கூறி அரசியலுக்கு […]

மாவை சேனாதிராசாவை நோில் கிண்டலடித்த சீ.வி.விக்னேஸ்வரன்…

யாழ்.பல்கலைக்கழக மாணவா்களால் நேற்று நடாத்தப்பட்ட கவனயீா்ப்பு போராட்டத்தில் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனும் மாவை சேனாதிராசாவும் நேருக்கு நோ் சந்தித்துக் கொண்டனா். இதன்போது கனகாலம் நித்திரையோ? என சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுள்ளாா். இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா நாங்கள் விழிப்பாகத்தான் இருக்கிறோம். எங்கள் போராட்ட வரலாறு உங்களுக்கு தொியும்தானே? என பதிலளித்துள்ளாா்.

அரசு காணிகளை விற்பதாக போலி பிரசாரங்கள்!

இலங்கை இராணுவத் தலைமையக காணியை வெளிநாட்டுக்கு விற்ற தேசப்பற்றாளர்கள் என தம்மை இனங்காட்டிக்கொள்பவர்கள், தற்போதைய அரசாங்கமே அரச காணிகளை விற்பதாக போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் அவ்வாறு அரச காணிகள் எதனையும் விற்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னைய மகிந்த அரசின் காலத்தில் கொழும்பு காலி வீதியிலிருந்த பாதுகாப்பு அமைச்சின் பெருமளவு காணிகள் சீன அரசிற்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் […]

கிழக்கில் கால் பதித்த தமிழ் மக்கள் கூட்டணி!

வடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பின் கோட்டை என வர்ணிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதியிலே முதலாவது மக்கள் சந்திப்பு இன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சந்திப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடருமென தமிழ் மக்கள் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]

மாங்குளத்தில் ஆதிசிவன் சிலை, திருக்குடமுழுக்கு…

முல்லைத்தீவு- மாங்குளம் பகுதியில் சிவஞான சித்தா்பீட வளாகத்தில் ஆதிசிவன் சிலை ஒ ன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் பாாியளவில் குடியேற்றங்கள் மற்றும் திட்டமிட்ட பௌத்தமய மாக்கல் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஆதிசிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

யாழில் வெங்காய விலைகளில் பெரும் வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர், இடைக்காடு, நவக்கிரி, உரும்பிராய், ஊரெழு, அச்சுவேலி, மற்றும் பத்தைமேனி போன்ற பிரதேசங்களில் ஆயிரத்து 500 வரையிலான ஹெக்ரேயர் நிலப்பரப்பில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்றவாறு அதிக விளைச்சலை இம்முறை காலபோகத்தின்போது விவசாயிகள் […]

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

இன்றைய ராசிபலன் 17.03.2019

மேஷம்: இன்றையதினம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட் பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கல்களை பேசி தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் […]

இலங்கையில் சில பிரதேங்களில் இடம்பெற்ற நிலநடுக்கம்!

மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி இயக்குனர் உதய குமார தெரிவித்துள்ளார். அதற்கமைய பதுளை, ஹாலிஎல, பசறை, வெலிமடை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாக நிலையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி […]