மினுவாங்கொடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 32 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, குறித்த சந்தேக நபர்களை இன்று (புதன்கிழமை) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களிலிருந்து மீள முன்னர், கடந்த 13ஆம் தேதி திங்கட்கிழமை வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின குருநாகல், சிலாபம், […]
முக்கிய செய்திகள்
Head News
கிளிநொச்சியில் இராணுவத்தினர் ஊர்வலம்
“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
இன்றைய ராசிபலன் 22.05.2019
மேஷம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பணப்புழக் கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புதுவாய்ப்புகள் வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப்போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் […]
சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை
குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சங்ரிலா விருந்தகத்தில் குண்டு தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவர் சஹ்ரான் ஹஷீம் என மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார். சஹ்ரான் ஹஷீமின் மரபணு பரிசோதனைக்காக அவரின் […]
முள்ளிவாய்க்காலில் விடுதலை புலிகளின் சடலம் மீட்பு
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ் .லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது . சட்டவைத்திய அதிகாரி,மற்றும் தடயவியல் பொலிசார்,மாவட்ட நீதிவான் ஆகியோரின் முன்னிலையில் இன்றுகாலை இந்த உடலம் காணப்பட்ட பிரதேசம் அகழ்வு செய்யபட்டு உடலத்தின் எச்சங்கள் மீட்க்கபட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மண்டையோடு சிதைவடைந்தநிலையில் […]
கோட்டாபயவிற்கு எதிரான வழக்கின் நிலை
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் தொடர்ந்திருந்த வழக்கினை, நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது. முன்னைய அரசாங்க காலப்பகுதியில், டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்திற்கு 34 மில்லியன் ரூபாய் அளவான அரச நிதி பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அடிபணிய வேண்டாம் மஹிந்தவின் அறிவிப்பு
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினால் அது நாம் பயங்கரவாதத்திற்கு அடிபணிவதாக அமைந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தலைநகர் பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் பம்பலபிட்டி இந்து கல்லூரியின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. […]
வற்றாப்பளைக்கு சென்றவர்களிற்கு நேர்ந்த கதி!
யாழ்ப்பாணத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்றவர்கள் பளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். வடமராட்சியிலிருந்து வான் ஒன்றில் சென்ற குறித்த நபர்கள் கைக்குண்டு ஒன்றைக் கொண்டு சென்றதன் காரணமாகவே இந்த கைது இடம்பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் போக்குவரத்து விதிமுறையினை மீறியமைக்காக பொலிஸாருக்கும் வானில் சென்றவர்களுக்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன்காரணமாகவே குறித்த நபர்களைப் பழிவாங்குவதற்காக பொலிஸார் தாமே கைக்குண்டை வைத்துவிட்டு கைதுசெய்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். பொலிஸாரின் இந்த திட்டமிட்ட செயலுக்கு […]
இன்றைய ராசிபலன் 21.05.2019
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கணவன்-மனைவிக்குள் […]
30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம்
நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை கூறமுடியாது எனவும், சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அதனை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் பொறுப்பை நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் வெற்றிகரமாக அதனை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தில் உயிர்நீத்த படைவீரர்களை […]





