முக்கிய செய்திகள்

Head News

மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா தேர்தல் வாக்குறுதி

‘மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்’ என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார். அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர […]

யாழ். படைகளின் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி நியமனம்

யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ். படைகளின் தலைமையக கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதை அடுத்தே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு படைகளின் தலைமையக தளபதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி இன்று முதல் யாழ். […]

சவூதி அரேபியாவில் மலையகப் பெண் கொலை

மலையகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மத்தியகிழக்கு நாடான சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்ற ஹட்டன் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பெண்மணி ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி மரணித்துள்ளார். இவரின் உடல் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் அவர்களின் உறவினர்களிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த இப்பெண் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி கற்பகவள்ளி (வயது 41) மூன்று பிள்ளைகளின் தாய் எனத் தெரியவந்துள்ளது. இந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து தனது […]

நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு புதிய அரசமைப்பில் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சம்பந்தன்

புதிய அரசமைப்பில் ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன், வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள அனைவரும் கைக்கோர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். பண்டாரவளை இந்து இளைஞர் மன்றத்தின் 45 ஆவது ஆண்டு பூர்த்தி விழா நேற்று ஆர்.சி பெரியார் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்து அவர் கூறியதாவது, அரசியலமைப்பிலுள்ள 13 ஆவது திருத்த சட்டத்தில் […]

காங்கிரஸின் அபிவிருத்திக்கே மலையகத்தில் அடிக்கல் நாட்டப்படுகிறது : ஆறுமுகன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடந்த காலத்தில் மலையகத்தில் கொண்டுவந்த அபிவிருத்திக்கே தற்போது அடிக்கல் நாட்டிவருவதாக இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான தெரிவித்துள்ளார். தோட்ட சேவையாளர் காங்கிரஸ் ஒழுங்கு செய்திருந்த கூட்டமொன்று கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்திய அரசாங்கத்திடம் 23 தடவைகள் பேசிதான் 4, 000 வீடுகள் பெற்றுக்கொண்டோம். அதற்கு […]

இலங்கைக்கு சென்று இன அரசியல் சர்ச்சை

புத்த நெறியை மறந்த இரத்த வெறியர்கள் சிங்களர்கள் .

இலங்கையில் சிங்களர்கள் நடத்திய போர் புனிதப் போர் அல்ல தமிழர்கள் நடத்திய போர்தான் புனிதப்போர் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்திருப்பது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், இலங்கை பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்தது மகிழ்ச்சி தருகிறது என்றார்.ரஜினி மீது எங்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் வந்தால் தங்களுக்கு பாதகமாக அமையும் என […]

நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நேற்றிரவு உலகின் பல்வேறு நகரங்களில் புவிநேரம் அனுசரிக்கப்பட்டது. துருவப்பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடல் மட்டத்தின் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் உயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதை தொடர்ந்து, புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் புவி நேரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு […]

தமிழ் உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும்! – யாழில் தெரிவித்தார் சந்திரிகா

“தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம்.” – இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா, யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு […]

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற தந்திரோபாய நகர்வு தேவை! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்

“ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்றுவதற்கான கால எல்லையுடனான தந்திரோபாயத்தை இலங்கை உருவாக்க வேண்டும்.” – இவ்வாறு பிரிட்டன் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பிரதி அமைச்சர் ஜொய்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையில் ஆயுத மோதல்களின் பாரம்பரியத்துக்குத் தீர்வைக் காண்பதற்காக இன்னமும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல […]

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் – போப் பிரான்சிஸ் ஒப்புதல்

மத்திய பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிக்கு அருளாளர் பட்டம் வழங்க போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சிக்கு அருகிலுள்ள புல்லுவழி என்ற ஊரில் 1954-ம் ஆண்டு பிறந்தவர் ராணி மரியா. இவர் 1972-ல் கிடங்கூரில் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரட் துறவற சபையில் சேர்ந்து கன்னியாஸ்திரி ஆனார். 1975-ல் உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூருக்கு அனுப்பப்பட்டார். 1980-ல் கன்னியாஸ்திரியான இவர், 1992ல் மத்திய பிரதேச மாநிலம் உதய்நகருக்கு பணியாற்ற […]