முக்கிய செய்திகள்

Head News

உண்ணாவிரதத்தை கைவிட்ட விமல் வீரவன்ச

சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார். அவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டடுள்ளார். பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

புலம்பெயர் தமிழரால் யாழ் இசைக்கருவிகள் அன்பளிப்பு

யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் யாழ் இசைக்கருவிகள் இரண்டு புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது . யாழ் பொது நூலகத்தில் பிரதம நூலகர் சுகந்தி தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி கையளிக்கப்பட்டது. இந்த யாழ் இசைக்கருவிகள் யாழ். பொது நூலகத்திற்கும் மற்றொன்று யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும் அடையாளமாகவும் கருதப்படும் யாழ் இசைக்கருவி தற்போதுவரை […]

சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

சிறிலங்கா இராணுவத்தின் 50 ஆவது தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று அதிகாரபூர்வமாகப் பதவியேற்றார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, பௌத்த மதகுருமாரின் ஆசி வழங்கும் நிகழ்வுடன் இந்தப் பதவியேற்பு இடம்பெற்றது. சிறிலங்கா இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த உள்ளிட்ட உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக […]

விமல் வீரவன்ச தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பிற்பகல் சிறைச்சாலை வைத்தியாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் உப்புல்தெனிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது விடுதலையை வலியுறுத்தி கடந்த 7 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். கடந்த 22 ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் […]

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை கோரவில்லை

வடக்கின் அடிப்படை வாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அரசாங்கம் கூறுவது போன்று உள்ளக விசாரணைக்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்களா என்று வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றனர். சாதாரண பொது மக்கள் அவ்வாறு கூறவில்லை. இலங்கை […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி – தொடரை 2-1 இந்தியா அசத்தல்

தரம்சாலாவில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. […]

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதி குருதேவ்சிங் பாதல் காலமானார்

பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த அரசியல்வாதியுமான குருதேவ்சிங் பாதல் இன்று காலை காலமானார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிரோன்மணி அகாலிதள கட்சியில் முத்த தலைவராக இருந்த 85 வயதான குருதேவ்சிங் பாதல் இதய நோய் காரணமாக இன்று காலை லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். குருதேவ்சிங் பாதல் இதற்கு முன்னர் பாஞ்க்ரைன் மற்றும் ஜைடொ ஆகிய தொகுதிகளில் இருந்து சட்டசபை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மறைந்த பாதலுக்கு இரண்டு […]

வட மாநிலத்தவர்களின் புத்தாண்டு உகாதி பண்டிகை – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து

வட மாநிலத்தவர்களின் புத்தாண்டாக கொண்டாடப்படும் உகாதி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வட மாநிலங்கள் மற்றும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களின் புத்தாண்டாக யுகாதி திருநாள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் யுகாதி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா […]

மனித மூளையுடன் கம்ப்யூட்டரை இணைத்து செயற்கை நுண்ணறிவு புகுத்தும் திட்டம்: புதிய நிறுவனம் துவங்கும் எலான் மஸ்க்

மனித மூளையுடன் கம்ப்யூட்டர்களை இணைத்து செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மேம்படுத்த நியூராலின்க் எனும் புதிய நிறுவனத்தை எலான் மஸ்க் துவங்குகிறார். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், நியூராலின்க் எனும் நிறுவனத்தை துவங்குகிறார். நியூராலின்க் நிறுவனத்திற்கான துவக்க கால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மனித மூளையுடன் இணைந்து செயல்படும் சாதனங்களை நியூராலின்க் உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூராலின்க் உருவாக்கும் சாதனங்கள் மனிதர்களை மென்பொருள்களுடன் […]

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தியது

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு தடையை ஐகோட்டு தளர்த்தி உள்ளது. இதன் மூலம் அக்டோபர் 20-ந்தேதிக்கு முன் வாங்கிய நிலத்தை பதிவு செய்யலாம். சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். ‘தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வீட்டு மனையாக மாற்றப்படுகிறது. இதனால், விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருகின்றன. விவசாய நிலத்தில் வீட்டு மனைகள் அமைக்க சட்டப்படி அனுமதி […]