புதிய அரசமைப்பு தொடர்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே அரசின் திட்டமாக இருப்பதால் அந்த முயற்சியை தோற்கடிப்பதற்காக தேசிய கூட்டணியொன்றை அமைக்கவேண்டும் என்ற தீர்மானம் கூட்டு எதிரணியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் இரவு கொழும்பில் விசேட கூட்டமொன்றை ஏற்பாடுசெய்திருந்தனர். பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றிருந்தனர். மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை நடைபெற்ற […]
முக்கிய செய்திகள்
Head News
குர்திஸ்தான் மலர்கிறது!
குர்திஷ் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை வலுவாக எழுப்பியிருக்கிறார்கள். பொது வாக்கெடுப்பில் தனிநாடு அமைய வேண்டும் என 92% மக்கள் வாக்களித்துள்ளனர். வடக்கு ஈராக் மாநிலமான குர்திஸ்தான் மாநில அரசு நடத்திய குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பில், அம்மாநில வாக்களர்களான 52 லட்சம் பேரில் 78% மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 92% பேர் குர்திஸ்தான் தனிநாடாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். குருது மக்களின் நிலப்பகுதி துருக்கி, ஈராக், ஈரான், சிரியா, […]
வித்தியாவுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி – வித்தியாவின் தாய் நெகிழ்ச்சி
என்னைப் போன்று இனி எந்தத் தாயும் அழக் கூடாது. என் மகள் வித்தியாவுக்காக கஸ்டப்பட்ட அனைவருக்கும் கண்ணீருடன் வித்தியா சார்பில் நன்றி கூறுகின்றேன். இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் சிவலோகநாதன் சரஸ்வதி கண்ணீருடன் தெரிவித்தார். வன்கொடுமையின் பின்னர் கொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியின் வழக்கில் குற்றவாளிகள் 7 பேருக்கு இன்று தூக்குத் தண்டணை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நீதிபதிகள் மூவருக்கும் நன்றிகள். விசாரணைகள் […]
வித்தியா கொலை வழக்கு – 7 பேருக்குத் தூக்கு!!
1ஆம், 7ஆம் எதிரிகள் வித்தியா கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு தீர்ப்பாயம் தூக்குத் தண்டனை விதித்தது. நீதிமன்றின் விளக்குள் அணைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 […]
நாளைய தீர்ப்பு வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்சலி!
யாழ். புங்குடுதீவு மாணவியான வித்தியா, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொடூர சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவிருக்கின்றது. மாணவி வித்தியா வன்புணர்வு, படுகொலை தொடர்பான வழக்கை விசாரணை செய்த மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நாளை மேற்படி தீர்ப்பை வழங்கவிருக்கின்றது. உலகையே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமென வர்ணிக்கப்படுகின்ற இக்குற்றச் செயலின் வழக்குத் தீர்ப்பை உலகெங்கும் ஏராளமானோர் பரபரப்புடன் […]
மஹிந்தவின் ஆட்டம் ஆரம்பம்! – இடைக்கால அறிக்கை கையிலெடுப்பு
புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி இன்று கொழும்பில் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து பொது எதிரணி எம்.பிக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மஹிந்தவுக்குச் சார்பான சட்டவல்லுநர்கள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக […]
சிவசக்தி ஆனந்தனையும் வியாழேந்திரனையும் பாராட்டுகிறார் நாமல்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ எம்.பி. பாராட்டுத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் நடந்துகொண்ட விதம் தொடர்பாகவே தனது டுவிட்டர் தளத்தில் அவர் தமிழில் பாராட்டிப் பதிவேற்றியுள்ளார். “நாடாளுமன்றம் வந்தும் தமிழ்த் தேசியக் […]
அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குகள் இடமாற்றப்பட்டு அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில், அரசியல் கைதிகள் மூவரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மேல்நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்று வந்த வழக்கை, அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றுக்கு இடமாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 13ஆம் திகதி, வவுனியா மேல் நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக வவுனியா […]
ஜெனீவாவில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயன்றதை அடுத்து வைகோவுக்கு பலத்த பாதுகாப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் இலங்கைத் தீவின் ஈழத் தமிழர்கள் பிரச்சினையும் விவாதிக்கப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெனீவா சென்று உள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வைகோ 2 முறை பேசினார். தனது பேச்சை முடித்த சில நிமிடத்திலேயே, […]
உலகெங்கும் இன்று பேரெழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்! – கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லூரில் பிரதான நிகழ்வு
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!” என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த தியாக தீபம் லெப். கேர்ணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் தாயக மண்ணிலும், புலம்பெயர் தேசத்திலும் இன்று பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ளன. வடக்கு, கிழக்கில் அமைதிப்படையாகக் காலடி எடுத்துவைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில் 12 நாட்கள் உண்ணாவிரதப் […]





