முக்கிய செய்திகள்

Head News

சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதம்!

அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளும் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வவுனியா நீதிமன்றில் கடந்த 4 வருடங்களாக நடைபெற்ற வழக்கை அநுராதபுரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு இடமாற்றியதை எதிர்த்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்று 8ஆவது நாளாகவும் […]

பிக்பாஸ் சீசன்-2 வில் சூர்யா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ. 50 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-2வை விரைவில் ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி. ஆனால் அந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று தெரிகிறது. அரசியலில் ஈடுபடுவதற்காக அவர் தயாராகிக் கொண்டிருப்பதால் பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை நடிகர் சூர்யா […]

யாழ்.காரைநகரில் கடற்படையின் படகு மோதி மீனவர் ஒருவர் பலி!

யாழ்.காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மீனவர் படுகாயமடைந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுடன் கடற்படையின் படகு மோதிப் படகு கவிழ்ந்ததில் அதில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மீனவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். காரைநகர் கடற்பரப்பில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், காரைநகர் வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது – 38) […]

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்த போது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அமெரிக்க நேரப்படி இரவு 10:30 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு தொடங்கியது. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மக்கள் அலறியடித்து ஓடினர். இதில் இருவர் உயிரிழந்தனர். 24 பேர் […]

பிக்பாஸில் ஆரவ் ஜெயித்தது அநியாயம்: நடிகை கஸ்தூரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை வெற்றியாளராக அறிவித்தது அநியாயம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. நூறாவது நாள் நிகழ்ச்சியில் ஓவியா, பரணி உட்பட பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டு 50 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார். இந்நிலையில், ஆரவ்வின் வெற்றியை விமர்சித்து நடிகை கஸ்தூரி டுவிட் […]

கனடா எட்மன்டனில் பயங்கரவாத தாக்குதல்?

கனடா-எட்மன்டனில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு பயங்கரவாத தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் குத்தப்பட்டதுடன் பாதசாரிகள் U-Haul டிரக்கினால் தாக்கப்பட்டுள்ளனர். ஓடிக்கொண்டிருந்த யு-ஹால் வாகனத்தில் இருந்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டுளளது. நான்கு பாதசாரிகள் மோதி விழுத்தப்பட்டுள்ளனர். எட்மன்டனை சேர்ந்த 30-வயதுடைய மனிதன் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவன் தனியாக செயல்பட்டதாக தெரிவித்த பொலிசார் இதில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டடிருப்பார்களா என கருதப்படவில்லை. எட்மன்டன் மக்களை- அவர்களது சுற்றாடல்களில் இருப்பவர்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு எட்மன்டன் […]

பிரான்சில் புகையிரத நிலையத்தில் தாக்குதல்: இருவர் படுகொலை

தென் பிரான்ஸ் பகுதியில் உள்ள மார்செய்ல் (Marseille ) நகரில் உள்ள செயின்ட் சார்ள்ஸ் (Saint Charles ) நிலக்கீழ் புகையிரத நிலயத்தில் இன்று இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி மேற்கொண்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளியை சுட்டுக் கொன்றுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. குறித்த பகுதிக்கு பொதுமக்கள் […]

அரசியலில் வெற்றி பெறும் சூட்சமங்கள் கமலுக்கு மட்டுமே தெரியும்!

நடிகர் திலகம், செவாலியே சிவாஜி என தமிழ் சினிமாவில் ஒப்பற்றவராக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். அவரின் மணி மண்டபம் இன்று சென்னை அடையாறில் திறக்கப்பட்டது. இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் என பலர் பங்கேற்றனர். நடிகர் சங்கம் சார்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கமல் பேசிய போது எத்தனை தடைகள் இருந்தாலும், ஒரு ரசிகனாக இங்கு வந்திருப்பேன். இந்நிகழ்விற்கு என்னை அழைத்த கலைத்துறைக்கும், தமிழக அரசுக்கும், அரசியல்லுக்கும் நன்றி […]

காணாமல்போனோர் பணியகத்துக்கு நான்கு தமிழ் ஆணையாளர்கள் கட்டாயம் வேண்டும்

“காணாமல்போனோர் அலுவலகத்துக்கு நியமிக்கப்படும் 7 ஆணையாளர்களில் 4 பேர் தமிழர்களாக இருக்கவேண்டும். எமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். வடக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையேயான சந்திப்பு மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. […]

தமிழ் மக்கள் ஏற்காத தீர்வை ஒருபோதும் கூட்டமைப்பு ஆதரிக்காது!

“தமிழ் மக்கள் விரும்பாத தீர்வை உள்ளடக்கிய அரசமைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரிக்காது. தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யும் தீர்வை அடைவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மன்னார் மாவட்ட ஆயர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையிடம் ஆணித்தரமாகத் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தைப் பாராட்டுகின்றேன். அரசியல் அமைப்பு முயற்சி வெற்றிபெற எமது ஆசிகள் என்றைக்கும் […]