உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலும் நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். Loading…
முக்கிய செய்திகள்
Head News
போர்க்குற்றத்துக்குச் சான்றான முள்ளிவாய்க்காலில் பப்லோ!
நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேடஅறிக்கையாளர் பப்லோ டி கிறிப் இன்று வடக்குக்குச் சென்றார். இதன்போது அவர், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்குச் சான்றான இடமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அங்குள்ள தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டார். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார். அதேவேளை, […]
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: ஜனாதிபதியின் அழைப்புக்காக காத்திருக்கிறது சம்பந்தன் குழு!
அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் அனுமதி கேட்டுள்ளனர். எனினும், ஜனாதிபதி செயலகத்திலிருந்து சந்திப்புக்குரிய அழைப்பு இதுவரை வரவில்லை. உண்ணாவிரதக் கைதிகளுக்கு அரசு உடனடியாக உரிய பதிலை வழங்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் […]
ஓவியாவிற்கு புகழ் பெற தகுதி இல்லை ஜூலி
தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடிவடைந்ததை அடுத்து அதில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் சில பத்திரிகைகளிற்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு தான் அதிக புகழ் மற்றும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், அவர் தற்போது பல ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதே போல ஜூலி, காயத்ரியின் பெயர் பயங்கரமாக கெட்டு விட்டது. ஜூலி எங்கே சென்றாலும் அவரை ஓவியாவின் ரசிகர்கள் […]
இனிப்புக் கொடுத்த இராணுவத்தினரிடம் கேப்பாபிலவு மக்கள் சரமாரியாகக் கேள்வி!
முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனிப்புக் கொடுத்த படையினரிடம் அவர்கள சரமாரியாகக் கேள்வியெழுப்பினர். இலங்கைப் படையினரின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேப்பாப்பிலவில் நிலைகொண்டுள்ள படையினரால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது. இதன்போது பேராட்டக்காரரான ஆறுமுகம், படையினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். “எப்போது எங்கள் இடங்களை விடுவீர்கள்” என்றார். இதற்குப் பதிலளித்த படையினர், “மிகவும் கஷ்டப்பட்டு உங்கள் வாழ் இடங்களில் இருந்த எங்களது முகாம்களை […]
ஒட்டுசுட்டானில் சுடலையை ஆக்கிரமித்துள்ளது இராணுவம்! – பொதுமக்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள வெடுக்குநாரி பொது மயானத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தப் பொதுமயானத்தை மீளக் கையளிக்கப் படையினர் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்றும், அந்தப் பகுதியில் புத்தரின் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஒட்டுசுட்டான் கிராமவாசிகளும், முத்தயன்கட்டு கிராமவாசிகளும் வெடுக்குநாரி சுடலையைக் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு படையினர் ஆக்கிரமித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. […]
பிணைமுறி மோசடி விசாரணை: ஐ.தே.க. அமைச்சர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்!
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணைகளில் எதுவித தலையீடுகளையும் தம்மால் செய்யமுடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அதனை எதிர்கொண்டேயாக வேண்டுமென்றும், அதில் சமரசத்துக்கே இடமில்லையென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களான […]
புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!
அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார். ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிய அரசமைப்புக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் தீவிர பிரசரங்களை முன்னெடுத்துவருவதுடன், நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டிவருகின்றன. இதனால், […]
புதிய அரசமைப்பு குறித்து ஜயம்பதி, சுமந்திரனிடம் 20இல் கேட்டறிவார் பப்லோ!
இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் ஐ.நா. அதிகாரிகளும் ஆர்வம்கொண்டுள்ளனர். அந்தவகையில் நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறிப் எதிர்வரும் 20ஆம் திகதி புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால அறிக்கை குறித்து கொழும்பில் முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். புதிய […]
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வடக்கில் ஹர்த்தால்!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மாகாணத்தில் முழுமையான ஹர்த்தால் நடைபெறவுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இந்தக் ஹர்த்தாலுக்கு பல பொது அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், வடக்கு […]





