ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டி பிரதம நீதியரசர் நளின் பெரேராவிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என சபாநாயகர் காரியாலயம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய அக்கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால […]
இலங்கை செய்திகள்
மற்றுமொரு முக்கிய முடிவுக்குள் நகரும் சம்பந்தன்
இலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து உலக நாடுகளின் தூதுவர்களுக்குச் சம்பந்தன் இந்தச் சந்திப்பில் விளக்குவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து விலக்கிய ஜனாதிபதி, […]
யாழ்ப்பாணத்தில் பரவும் டெங்கு நோய்!
யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் […]
பிரத்தானியாவில் இலங்கையருக்கு கிடைத்த அதிஷ்டம்!
பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையர் ஒருவருக்கு, அந்த நாட்டின் உள்துறை அமைச்சினால் 19 ஆயிரத்து 500 பவுண்கள் நட்டயீடு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக தெரிவித்து பிரித்தானியாவில் அரசியல் அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கையருக்கே இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.பிரித்தானிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கே.ஜீ என்று அடையாளப்படுத்தப்படும் அவர், பிரித்தானிய குடியேறிகள் முகாமில் 2016ம் ஆண்டு ஜனவரி – பெப்ரவரி மாதக் காலப்பகுதியில் 30 நாட்கள் வரையில் […]
மகிந்தவை எதிர்த்து படையெடுக்கும் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள்
மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்துக் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவையும் அந்தக் கட்சி நாடியுள்ளது. மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக பாராளுமன்றில் மூன்று தடவைகள் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். […]
தமிழ்மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும்
எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வௌியேயுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தவிர்ந்த மற்றைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தம்முடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஏதேனுமொரு கட்சிக்கு சார்பாக அந்த சின்னத்தில் போட்டியிட்டால் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படலாம் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மீண்டும் […]
ஐக்கிய தேசிய கட்சி மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது
ஐக்கிய தேசிய கட்சி தற்போது மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதி அமைச்சர் ஆனந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸ […]
மகிந்தவின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் மூவர்?
இலங்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சதித் திட்டத்துக்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், நீதியரசர் சரத் என் சில்வா, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆகியோர் துணையாக இருந்தனர் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 9ஆம் திகதி, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் அறிவிப்பு வரையப்பட்டு, அதில் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட போது, அதிபர் செயலகத்தில், கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும், இருந்துள்ளார். இந்தச் திட்டத்துக்கு […]
மோடியைக் கண்டார் சந்திரிகா! ஓடி ஒளித்த மகிந்த!
மாலைதீவு ஜனாதிபதியாக இம்ராஹிம் முகமது சோலி நேற்று பதவியேற்றார். இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்சவும் செல்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை. நாமல் ராஜபக்ச கலந்து கொண்டிருந்தார். அத்துடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் மஹிந்த […]
மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமில்லை!
புதிய அரசாங்கத்தை என்னால் விரைவில் அமைக்க முடியும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால் மீண்டுமொரு நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எங்களிடம் போதிய உறுப்பினர்கள் உள்ளனர் எங்களால் தொடர்ந்து செயற்பட முடியும் இதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு அரசியல் ஸ்திரதன்மை அவசியம் என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க […]





