இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கு ஹர்த்தால்: அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென சம்பந்தன், ஹக்கீம், ரிஷாத் வலியுறுத்து

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் நாளைமறுதினம் வியாழக்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறும் ஹர்த்தால் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அழைப்பு […]

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் வியாழனன்று ஹர்த்தால்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் மாத்திரமல்லாது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் நாளைமறுதினம் வியாழக்கிழமை பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெறவுள்ளது. வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்களின் அழைப்பின்பேரில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல்போனவர்களின் தெளிவான வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி வடக்கில் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய […]

சிவனொளிபாதமலையில் ‘ஓம் நமசிவாய’வுக்குத் தடை: முழுமையான விசாரணை கோரி அரசுக்கு இந்து குருக்கள் அமைப்பு கடிதம்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற இந்து பக்தர்களுக்கு, நந்திக் கொடியை ஏந்த வேண்டாம் என்றும், சிவனுக்குரிய கோஷங்களை எழுப்ப வேண்டாம் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர், இந்துசமய விவகார அமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பவுள்ளது. தமது ஒன்றியத்தின் சட்டஆலோசகர் ஊடாக இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகிறது என்றும், இது விடயத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக நடந்துகொண்டது கவலையளிக்கின்றது […]

13 வயது சிறுமி கூட்டு வல்லுறவு! – தாய், தாத்தா, மாமா பொலிஸாரிடம் சிக்கினர்

பதின்மூன்று வயது நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுமியின் தாத்தாவும், இராணுவ சிப்பாயாக இருந்துவரும் மாமாவும் தனமல்வில பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இப்பாலியல் வல்லுறவுக்கு உடந்தையாக இருந்தவர் என்று கருதப்படும் சிறுமியின் தாயாரும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும், தாயின் இரண்டாவது கணவனும் இந்தச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். தனமல்வில பகுதியின் உஸ்ஸகல என்ற கிராமத்தில், மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட சிறுமியை, சிறுமியின் தாத்தா தொடர்ச்சியாகப் […]

வாட்டி வதைக்கிறது வறட்சி! 9 இலட்சம் பேர் பரிதவிப்பு!! – வடக்கிலேயே அதிக பாதிப்பு

நாட்டில் தொடரும் வறட்சி காரணமாக 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிதண்ணீர் உட்பட தமது நாளாந்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்குரிய நீரைப் பெறுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளன. வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங்களும், நீர்நிலையங்களும் வற்றிப்போயுள்ளன. இதனால் பலமைல் தூரம் நடத்து சென்றே நீரைப் பெறவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், சிறுதானியச் செய்கை உட்பட விவசாய நடவடிக்கைகளுக்கும் […]

எரிபொருளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்ததாகவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் […]

சிறுவர்கள் – பெண்கள் மீதான வன்முறைகள் குறைவடைந்துள்ளன: மட்டு. பிரதி பொலிஸ்மா அதிபர்

மட்டக்களப்பில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் நிலையத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கான தனியான அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ”சிறுவர்கள் மற்றும் பெண்களின் சமூக நிலைமையை மேம்படுத்துவதற்காக நாம் […]

சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது

சொந்த நிலத்துக்கே உரிமை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பிரதேச தமிழ்மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வேறு பிரதேச சிங்கள மீனவர்கள் தமது நிலங்களுக்கு தற்போது உரிமை கொண்டாடிவருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். கொக்கிளாய் கடலில் தமது மீன்பிடிக்கான கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ளமை தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இன்றைய வழக்கு விசாரணைகளில் கொக்கிளாய் மீனவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகாத நிலையில், வழக்கை அடுத்த மாதம் […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், தேங்காய் உடைத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னால் ஏ9 வீதியின் அருகில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டம் இன்று 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், […]

நாட்டில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பம் கொண்ட காலநிலைக்கு ஈடுகொடுப்பதற்கு ஒவ்வொருவரும் அதிகளவில் நீர் பருகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிக உஷ்ணத்தின் காரணமாக உடம்பின் செயற்பாடுகள் பாரிய தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால், சளியுடன் கூடிய நோய்கள் […]