இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் 25,000 கொடுப்பனவு யாருக்கு கிடைக்கும்?

அரசாங்கத்தின் 25,000 கொடுப்பனவு யாருக்கு கிடைக்கும்?

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான வழிகாட்டுதலைத் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையில், பாதிக்கப்பட்ட வீடுகளின் அனைத்து வகைகளுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், கட்டமைப்புச் சேதம் இல்லாவிட்டாலும் சிறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியை கைது செய்யுமாறு தேரர் வலியுறுத்து!

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தியை கைது செய்யுமாறு தேரர் வலியுறுத்து!

அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி. வலவாஹங்குனவெவே தம்மரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். விசேட ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். “மட்டக்களப்புக்கு சென்றிருந்த அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, மல்வத்து ஓயா நீர் நிலை தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்டிருந்தார். எனவே, அவரைதான் முதலில் அவசரகால சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும். மல்வத்து ஓயா […]

இலங்கையில் 611 பேரை பலி வாங்கியது டித்வா புயல்…

இலங்கையில் 611 பேரை பலி வாங்கியது டித்வா புயல்…

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது. மேலும், 213 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் 576,626 குடும்பங்களைச் சேர்ந்த 2,054,535 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33,622 குடும்பங்களைச் சேர்ந்த 114,126 பேர் 956 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 4,309 வீடுகள் முழுமையாகவும், 69,635 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள […]

நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம்: சாமர எம்.பி

நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணிவிப்போம்: சாமர எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நீர்பாசனத்துறை அமைச்சருக்கு ஜம்பர் அணியவேண்டிய நிலை (சிறை தண்டனை) ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். “ மண்சரிவு அனர்த்தம் பற்றி நான் எதையும் கூற விரும்பவில்லை. ஆனால் படிப்படியாக நீரை திறந்திருந்தால் பாரிய வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டிருக்காது. இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பு பொறுப்பு கூறவேண்டும். பன்னலயில் முதியவர்கள் நீரில் […]

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

இலங்கை மீண்டெழும் திட்டம் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து மீண்டு வருவதற்குரிய தேசிய மீட்சி மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் இராஜதந்திர சமூகத்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் தலைமையிலேயே இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது. அவசரகால சூழ்நிலையின்போது வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காகவும் அனைத்து இராஜதந்திரத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் ஏனைய கூட்டாளர்களுக்கு பிரதமர் அமரசூரிய இதன்போது நன்றி தெரிவித்தார். இலங்கை […]

19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

19 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதி உள்ளிட்ட அவசரகால செயல்பாடுகளுக்காக நிதிகோரி முன்வைக்கப்பட்டுள்ள குறை நிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்காகவே இந்த விசேட சபை அமர்வு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் டிசம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த வருடம் ஜனவரி 6 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை மீண்டும் […]

அவசரகால சட்டத்தை அடக்குமுறை ஆயதமாக பயன்படுத்தவில்லை – ஜனாதிபதி

மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தைத் தயாரிப்பது அனைத்து அமைச்சுகளினதும், அரச திணைக்களங்களினதும் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களினதும் கடமை ஆகும். எனினும், அத்தகைய திட்டம் எதுவும் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன்படி, இந்த நேரத்தில் அனர்த்த முகாமைத்துவச் […]

யாழில் இளம் பெண் தற்கொலை

யாழில் இளம் பெண் தற்கொலை, சோகத்தில் மக்கள்

யாழில் இளம் பெண் தற்கொலை, சோகத்தில் மக்கள் யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிறன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இந்நிலையில் உயிரிழந்த குறித்த யுவதி மிகவும் நற்குணமுடையவர் என்பதுடன் மிகவும் அமைதியானவர் என கூறும் அயலவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் நல்லமுறையாக வாழவேண்டிய பிள்ளைகள் தற்பொழுது யாழில் தாண்டவமாடும் தற்கொலையால் […]

ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது

இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது

இனி 10 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியால் ஆட்சியை கைப்பற்ற முடியாது ஐக்கிய தேசிய கட்சி தற்போது ரணில் , சஜித் , கரு என மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இவ்வாறான பிளவுகள் தொடர்ந்தால் அவர்களால் அடுத்த பத்து வருடங்களுக்கு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார , பெரும்பான்மையுடைய ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சுதந்திர […]

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே - மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள

மஹிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து பாதுகாத்தது 30/1 பிரேரணையே – மங்கள மஹிந்த ராஜபக்ஷ்வை மின்சார கதிரையில் இருந்து பாதுகாக்க முடிந்ததும் 2015 இல் சமர்ப்பிக்கப்பட்ட 30/1 பிரேரணையின் அடிப்படையிலாகும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தின் இறுதி காலகட்டத்தில் எமது இராணுவம் மற்றும் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தன்னை மின்சார கதிரைக்கு கொண்டுசெல்லப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ்வே […]