செஞ்சோலை படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜெர்மன் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் (Brandenburger Tor) க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்தும் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. 2006 ஆகஸ்ட் 14 […]
இலங்கை செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 21,959 பேர் பாதிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக இதுவரை 21,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம்
முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு வள்ளிபுரம் இடைக்காட்டு சந்தியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு காலை 6 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் […]
மஹிந்த அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள போவதாக கூறி வந்தவர்கள் தற்போது வெட்கமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு அடிபிடிப்படும் நிலைமைக்கு சென்றுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தற்போது ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்கின்றனர். அதேபோல், கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தும் வகையில் தேசிய வளங்கள் எதனையும் தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்யவில்லை. எமது […]
விடுதலைப் புலிகளுடன் யுத்தம்! இராணுவ அதிகாரிகளை இரகசியமாக சந்தித்த மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெற்ற படைதளபதிகளை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை, முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென ஆர்வம்காட்டி வரும் ஜனாதிபதி, இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கடந்த ஆறாம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நடைபெற்று முடிந்த […]
பதுளையில் பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்:ஒருவர் பலி
பதுளை கொகோவத்த பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியதினால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றில் இவ்வாறு தீபரவியுள்ளதுடன், பதுளை காவற்துறை மற்றும் தீயணைப்பு பிரிவு தீயணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பதுளை பிரிதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் தீ பரவிய போது வர்த்தக நிலையத்தில் இருந்துள்ள நிலையில், குறித்த நபர் […]
இனிமேல் யாழ்ப்பாணத்தில் அதிரடி வேட்டை! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்
யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் தகவல் வழங்க தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, 076 609 3030 என்ற இலக்கத்திற்கு குறித்த தகவல்களை வழங்குமாறு வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறை அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றச் […]
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் நேற்றிரவு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடுகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது நவாலிப் பகுதிக்கும் அது பரவியுள்ளது. நவாலி வடக்கு, சங்கரத்தை பிரதான வீதியில் கேணியடிப் பகுதியிலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு 7.30 மணியளவில் சரமாரியாக கற்கள் வீசப்பட்டுள்ளது. வீட்டின் சீற் உடைந் துள்ளது. தெய்வாதீனமாக வீட்டில் உள்ளவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் வன்னியசேகரம் இது […]
யாழ். மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
யாழ். குடா நாட்டில் சமூகவிரோத செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், குடா நாட்டு மக்களுக்கு பொலிஸார் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, பொது மக்களுக்கு இடையூரான சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து 076-609-3030 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை, யாழ். குடா நாட்டில் அண்மை காலமாக வாள்வெட்டு, கொள்ளை, உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்நிலையிலேயே, பொது மக்களின் நலன் கருதி […]
யாழ் மருத்துவமனையில் பொலிஸார் அட்டகாசம்
தெல்லிப்பழை மருத்துவமனையில் நேற்றுமுன்தினமிரவு கடமையில் இருந்த மருத்துவருடன் மதுபோதையில் சென்ற பொலிஸார் தகாத வார்த்தைகளால் கதைத்துக் குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்த மூதாட்டி ஒருவரை 9 மணியளவில் முச்சக்கர வண்டிச் சாரதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மூதாட்டியைப் பொறுப்பேற்ற மருத்துவர் மூதாட்டிக்கு என்ன நடந்தது என்று வினவியுள்ளார். மூதாட்டிக்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியாது, ஆனால் மூதாட்டியை காங்கேசன்துறைப் பொலிஸாரே ஏற்றியனுப்பினர் என்று முச்சக்கர வண்டிச் சாரதி தெரிவித்துள்ளார். […]





