நல்லாட்சி அரசு ஆட்சிப் பீடம் ஏறிய பின்னர் முல்லைத்தீவில் எந்தச் சிங்களக் குடியேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அங்கு நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள் எல்லாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவையே. முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்க ப்பட்டமைக்குரிய சாட்சியங்கள் இருந்தால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அதை விடுத்து இனவாதம் கக்கிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரச […]
இலங்கை செய்திகள்
வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக […]
யாழ் வீதியில் பொலிஸாருக்கு ஏற்பட்ட பரிதாபம்
யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவை வாட்டியெடுக்கும் வறட்சி! மக்கள் கடும் அவதி
வவுனியாவில் நிலவும் வறட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. த்துடன் வவுனியா தெற்கு பிரதேச செயலக […]
இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி
கம்பகா – படுவத்தவில் இராணுவத்தின் இரகசிய முகாம் இருந்தது தமக்குத் தெரியும் என்று இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து நடத்தப்படும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தகவல்களை வெளியிட மறுக்கிறார் […]
முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கேட்டு போராடும் விஜயகலா
கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. […]
நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி – தெய்வானை கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர். இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு […]
தேசிய அடையாள அட்டையை தொலைத்து விட்டீர்களா?? இதனை வாசியுங்கள்
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆவது வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பத்திற்காக 100 ரூபாவும், தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதி ஒன்றை வழங்குவதற்காக 250 ரூபாவும், காணாமல் போன […]
திடீரென்று தேம்பி தேம்பி அழும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்- மஹத் ஏதாவது செய்தாரா?
பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்களது குடும்பத்தை பிரிந்த தான் வீட்டிற்குள் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்த சில நாட்களில் போட்டியாளர்கள் பலர் கஷ்டப்பட்டனர், நேற்று மஹத் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் பிக்பாஸ் வீடே சோகமானது. இப்போது வந்த புதிய புரொமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தேம்பி தேம்பி அழுகின்றனர். காரணம் அவரவர் வீட்டில் இருந்து வந்த கடிதம். இதுநாள் வரை யாஷிகா அழுவாரா என்று கேட்ட ரசிகர்கள் இப்போது அவர் […]
மண்ணையும், மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம்! சிவனேசன்
மண்ணையும், மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் என வட மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் தெரிவித்துள்ளார். மகாவலி திட்டம் மூலம் நில அபகரிப்பு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியம் இல்லாத பிரதேசங்களில், தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம் அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக […]





