பேரிடர் முகாமைத்துவத்துக்கான விசேட தேசிய சபைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் இணைத் தலைமை வகிப்பார் 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்கப் பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்தச் சபை நிறுவப்பட்டது. எனினும், அந்தச் சபையின் செயற்பாடு இயங்கா […]
இலங்கை செய்திகள்
எவரும் ஓடி ஒளியாதீர்; ஒன்றிணைந்து நாட்டை மீட்க முன்வாருங்கள்! – ஜனாதிபதி அநுர
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், இத்தகைய சவாலை எதிர்கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதுடன், ஓடி ஒளிவதோ அல்லது அச்சத்துடன் பார்ப்பதோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற கடற்படையின் நிகழ்ச்சி ஒன்றின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி […]
பகிடிவதை குற்றச்சாட்டு: யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கும் பிணை!
பகிடிவதை புரிந்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள வீடொன்றுக்குக் கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 19 பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள் கடந்த மாதம் 29ஆம் திகதி கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். விளக்கமறியல் […]
மாகாண சபைத் தேர்தல் பற்றி ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு!
மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது. சபை முதல்வரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த யோசனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படடுள்ளது. கலப்புத் தேர்தல் முறைமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவதற்கு விரிவான விவாதங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்தநிலையில், தெரிவுக்குழுவின் அறிக்கை […]
அசோக ரன்வலவுக்கு பிணை
முன்னாள் சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். முன்னதாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் இன்று(12) அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் – ஜனாதிபதி
அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் நெடுஞ்சாலை கட்டமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்புகளை சீர்செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு […]
அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் இலங்கைக்கு வந்தடைந்தன!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளம் கண்டுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசரகால விநியோகப் பொருட்களான,கூடாரங்கள், நீர், சுகாதார வசதிகள், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை கொண்டு செல்ல இந்த அணி இலங்கை விமானப்படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. இந்த […]
எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் அனர்த்தத்தைத் தடுக்க முடியாது! – சரத் பொன்சேகா
இலங்கையில் கடந்த நாட்களில் நிலவிய அதிதீவிர காலநிலையைத் தடுப்பதற்குத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரும் எதிர்க்கட்சியின் நடவடிக்கை அபத்தமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சி காலங்களின் போதும், இது போன்ற நிலைமை ஏற்பட்டிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் இது போன்ற அனர்த்தம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால ஆட்சியாளர்கள் ஆட்சியில் […]
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தெஹிவளை- “ஏக்வாடஸ்” விளையாட்டு மைதானம் அருகே சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவானது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த 34 வயதுடைய பொதுமகன் ஒருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மனிதாபிமான நிவாரணப்பொருட்களுடன் இலங்கை வந்தது சுவிஸ் விமானம்!
டித்வா புயல் ஏற்படுத்திய பேரழிவைத் தொடர்ந்து, இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை சுவிற்சர்லாந்து தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்நாட்டு விமானம் ஒன்று நிவாரணப் பொருட்களுடன் இன்று (6) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. சுவிஸ் மனிதாபிமான உதவி (Swiss Humanitarian Aid-SHA) வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உதவியின் ஒரு பகுதியாக, இன்று ஏழு நிபுணர்களைக் கொண்ட Swiss Rapid Response Team இலங்கைக்கு வந்துள்ளது. இந்த நிபுணர் குழு, இலங்கையில் உள்ள […]





