Saturday , October 18 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் (page 71)

தமிழ்நாடு செய்திகள்

போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை

கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பின் செயலாளரான கதிர்மதியோன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

Read More »

லிப்டில் சிக்கினார் முதல்வர் எடப்பட்டி பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கியதால் விமான நிலைய வளாகமே பெரும் பரபரப்பில் இருந்தது. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது அவர் லிப்டில் சென்றபோது திடீரென லிப்ட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்றதால் லிப்டில் முதல்வர் பழனிச்சாமி சிக்கினார். இதுகுறித்த தகவல் …

Read More »

சர்க்கரை விலை உயர்வு: ஜி.கே.வாசன் கண்டனம்

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஏழை, எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கதக்கது. வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50 வில் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். அன்றாடம் …

Read More »

திருமண விழாவில் பங்கேற்கிறார் கருணாநிதி

உடல் நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். சுவாசப் பிரச்னை காரணமாக அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த ஓராண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்ததை அடுத்து கடந்த 19 ம் தேதி முரசொலி பவள விழா கண்காட்சியை பார்வையிட்டார். இந்த …

Read More »

316 புதிய மருத்துவர்கள் நியமனம்…

அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் நடைபெற்ற மருத்துவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில், 316 மருத்துவர்களுக்கான பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் அரசு ஆரம்பநிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்ற நிலை தற்போது மாறியுள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்படுள்ள மருத்துவர்கள் உட்பட அனைத்து மருத்துவர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் …

Read More »

நவம்பர் 7-ந்தேதி கட்சி அறிவிப்பு இல்லை

கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தனது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுடனும் தன்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக சில ஏற்பாடுகள் நடப்பதாகவும் அதுபற்றிய அறிவிப்பு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என வார இதழ் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நவம்பர் 7-ந்தேதி கட்சி …

Read More »

பேனர் தடையை நீக்க சென்னை மாநகராட்சி மேல்முறையீடு

உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க கூடாது என்று சமீபத்தில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த தடையால் பிரிண்டிங் பிரஸ் தொழில் பாதிப்பு அடையும் என்றும் கருத்து கூறப்பட்டது இந்த நிலையில் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்-அவுட் வைக்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த …

Read More »

மருத்துவமனையில் நடராஜன் ; வெளியான புகைப்படம்

புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரை பார்க்க பரோல் கேட்டு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்து விட்டு சென்றார் சசிகலா. முன்னதாக நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. அதன்பின், அவருக்கு செயற்கை …

Read More »

நமது இயக்கத்தில் இணையுங்கள்

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நவ.7ம் தேதி அவரது பிறந்தநாளன்று அவர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு செய்திதாளுக்கு அவர் அளித்த பேட்டியில் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்வார்கள் என காத்திருந்தது போதும். நம்மால் முடியும். கடமையை செய்ய விரும்புபவர்கள் வாருங்கள். இளைஞர்களை ஒன்றிணைக்க வேண்டிய தருணம் இது. கடமையை செய்ய யார் முன்வந்தாலும் அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். …

Read More »

தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி ராக்கி என்ற வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் கோபுரத்தின் மீது இருந்த அந்த இளைஞர் பேஸ்புக் மூலம் தனது மிரட்டல் காட்சியை நேரலை செய்தார்.தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பிளேடால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் அவருடன் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தற்கொலை மிரட்டல் விடுத்த ராக்கி …

Read More »