சிறிகொத்தாவில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ரணில் காட்டமான பேச்சு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதான போட்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலானதாகவே இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருப்பதற்கல்ல, ஆட்சியை கைப்பற்றுவதற்கே போட்டியிடுகிறது என்று ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஐ.தே.க.வை விட்டு யார் விலகிச்சென்றாலும் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் விலகிச் சென்றவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்தாது கட்சிக்குள் தற்போது …
Read More »ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிப்பது ஏன் ?
ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை புறக்கணிப்பது ஏன் ? ஜூன் 2 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழரோ அல்லது முஸ்லிமோ உறுப்பினராக இல்லை. அந்த மாகாணத்தின் சனத்தொகையில் தமிழர்களும் , முஸ்லிம்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பகுதியினராக வாழ்கின்றபோதிலும் ,அந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி செயலணியில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை. இரண்டாவதாக ,அந்த செயலணியில் பல சிங்கள …
Read More »தேர்தல் திகதியை தீர்மானம் செய்ய சுகாதார தரப்பை திங்களன்று சந்திக்கிறது ஆணைக்குழு – மஹிந்த தேசப்பிரிய
தேர்தல் திகதியை தீர்மானம் செய்ய சுகாதார தரப்பை திங்களன்று சந்திக்கிறது ஆணைக்குழு – மஹிந்த தேசப்பிரிய 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் திகதியை தீர்மானம் செய்வதற்காக எதிர்வரும் திங்களன்று தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது. இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னதாக சுகாதார துறையினருடன் முக்கிய கலந்துரையாடலொன்றிலும் பங்கேற்கவுள்ளது. தேர்தலை நடத்துவதற்குரிய உகந்தநிலைமைகள் காணப்படுகின்றமையை உறுதிசெய்வது பற்றியும், தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய மேலதிக பாதுகாப்பு முறைகள் பற்றியும் விரிவாக இதன்போது …
Read More »“சேலை அழகு என்பதற்காக அழகுராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது”: – ரணில் தெரிவிப்பு
“சேலை அழகு என்பதற்காக அழகுராணி போட்டியில் வெற்றியீட்ட முடியாது”: – ரணில் தெரிவிப்பு சேலை அழகு என்பதற்காக அழகு ராணி போட்டியில் வெற்றிப்பெற்று விட முடியாது. எனவே தேர்தல் குறித்து கூடிய அவதானம் செலுத்தி செயற்பட வேண்டும். தள்ளுப்படி செய்யப்பட்ட மனுக்கள் ஐக்கிய தேசிய கட்சி தாக்கல் செய்தவையாகவே மக்கள் கருதுகின்றனர். எனவே மக்கள் மத்தியில் உண்மை நிலையினை கொண்டுச்செல்ல வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதே போன்று …
Read More »13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது!
13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவர் கைது! அம்பாறை – ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது மூவரையும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 19 வயதுடைய இளைஞன், அவருடைய தந்தை மற்றும் சிறுமியின் தாய் …
Read More »வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்
வேட்புமனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் இன்று (04.06.2020) மாலை 5 மணிக்கு கையொப்பமிட்டார். கொட்டகலையிலுள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் (சி.எல்.எப்) நடைபெற்ற இதற்கான நிகழ்வில் இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா, உப தலைவர் செந்தில் தொண்டமான், பொருளாளர் மருதபாண்டி ரமேஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட இ.தொ.கா.வின் உயர்மட்ட பிரமுகர்கள் …
Read More »திருமணமாகி 9 நாட்களில் மனைவியை கொன்ற கணவன் – மட்டக்களப்பில் சம்பவம்
திருமணமாகி 9 நாட்களில் மனைவியை கொன்ற கணவன் – மட்டக்களப்பில் சம்பவம் மட்டக்களப்பு – ஐயங்கேணி, ஜின்னா வீதி பகுதியில் தனது மனைவியை (24-வயது) நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நேற்று (03) இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஐயங்கேணிக் கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் ஷியாமியா (24-வயது) என்ற இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 9 தினங்களுக்கு முன்னரே, திருமணம் முடித்து விவாகரத்து …
Read More »தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர்
தொண்டமானின் பதவியை பொறுப்பேற்றார் பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக இன்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி புதிய அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவையடுத்து இந்த அமைச்சுப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருந்ததையடுத்து …
Read More »பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி
பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் – மைத்திரி கொரோனா வைரஸ் பரவலில் நாடு வழமைக்கு திரும்பியுள்ளதால் பலமான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன , பொதுத் தேர்தலில் பாரியதொரு வெற்றி உறுதியாகும் என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக மாத்திரமின்றி ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற பலமான …
Read More »சுமந்திரன் பதவி விலகவேண்டும் – பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்..!
சுமந்திரன் பதவி விலகவேண்டும் – பங்காளி கட்சியின் தலைவர்கள் ஆவேசம்..! தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் தானாக விலகவேண்டும். என கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள் கேட்டிருக்கும் நிலையில், நான் விலகமாட்டேன். விரும்பினால் என்னை விலக்கட்டும். என சுமந்திரன் கூறியுள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். என …
Read More »